கடலில் குதிக்கிறது, குஸ்தி எடுப்பதெல்லாம் தலைவருக்கு அழகா..? ராகுல்காந்தியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய குஷ்பு.!

Published : Mar 02, 2021, 09:44 PM IST
கடலில் குதிக்கிறது, குஸ்தி எடுப்பதெல்லாம் தலைவருக்கு அழகா..? ராகுல்காந்தியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய குஷ்பு.!

சுருக்கம்

கடலில் குதிப்பது, குஸ்தி எடுப்பது என ராகுல் காந்தி செய்கிறார். இது நல்ல தலைவருக்கு அழகல்ல என்று பாஜவைச் சேர்ந்த நடிகை குஷ்பு விமர்சனம் செய்துள்ளார்.  

திருநெல்வேலியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நடிகை குஷ்பு கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், “தென் தமிழகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பொய்ப் பிரசாரத்தைச் செய்துவிட்டு சென்றுள்ளார். கடலில் குதிப்பது, குஸ்தி எடுப்பது என ராகுல் காந்தி செய்கிறார். இது நல்ல தலைவருக்கு அழகல்ல. ஒரு தலைவர் என்பவர் என்ன திட்டத்தை கொண்டு வருவோம் என மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் தவிர இப்படி ஈடுபடக் கூடாது.


வழக்கமாக நிதியாண்டின் தொடக்கத்திலும் இறுதியிலும் எரிபொருளின் விலை உயர்வது வாடிக்கைதான். நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி வெற்றி வாகை சூடும். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எல்லா தொகுதிகளிலும் தேர்தல் பிரசார பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. எடப்பாடி அரசு எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை. மத்தியிலும் மாநிலத்திலும் ஊழலற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது.” என்று குஷ்பு தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!
முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்