மனைவியை தேர்தல் களத்தில் இறக்கிவிட்ட நடிகர்... சீட்டு கேட்டு உதயநிதியுடன் சந்திப்பு..!

Published : Mar 02, 2021, 09:37 PM ISTUpdated : Mar 04, 2021, 11:00 PM IST
மனைவியை தேர்தல் களத்தில் இறக்கிவிட்ட நடிகர்... சீட்டு கேட்டு உதயநிதியுடன் சந்திப்பு..!

சுருக்கம்

திமுகவில் திருச்சி மணப்பாறை  தொகுதியில் சீட்டு கேட்டு பிரபல நடிகர் விமலுடைய மனைவி விருப்ப மனு அளித்துள்ளார்.   

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.6-இல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை திமுகவில் 8 ஆயிரம் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ‘களவாணி’, ‘வாகைசூடவா’. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள  நடிகர் விமலின் மனைவியும் திமுகவில் சீட்டு கேட்டு விருப்ப மனுவை அளித்துள்ளார். 
 நடிகர் விமலின் சொந்த ஊர் திருச்சியை அடுத்த மணப்பாறை ஆகும். இந்தத் தொகுதியில் சீட்டு கேட்டுதான் விமலின் மனைவி அக்‌ஷயா விருப்ப மனுவை அளித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் விருப்ப மனுக்களை வழங்கி வரும் நிலையில், அக்‌ஷயா தனது கணவர் விமலுடன் சென்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியைச் சந்தித்து விருப்ப மனு அளித்துள்ளார். தேர்தலில் மணப்பாறை தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்படுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. மணப்பாறை திமுகவுக்கு ஒதுக்கப்படும்பட்சத்தில் விமலின் மனைவி அக்‌ஷயாவுக்கு சீட்டு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!