அடி தூள்.. ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாள்.. அதிரடி காட்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Oct 30, 2021, 12:42 PM IST
Highlights

நவம்பர் 1 ஆம் தேதி என்பது சென்னை மாநிலத்தில் இருந்து சில பகுதிகள் பிரிந்து சென்ற நாள், அது வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள் தான் என்றாலும், சென்னை மாநிலத்தை தமிழ் நாடு என்று ஆட்சி ரீதியாக பெயர் சூட்டப்பட்ட நாள் தான் நாம் மகிழுந்து கொண்டாடுவதற்கு உரிய வரலாற்று திருநாளாக இருக்கமுடியும். 

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான அரசாணை விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இத குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 

1956ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 முதல் நவம்பர் 1ஆம் நாளை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலதரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லைப் போராட்டத்தை நினைவுகூரும் நாளாகத்தான் அமையுமே தவிர, தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணாவால் 1968-ம் ஆண்டு ஜூலை - 18ஆம் நாள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் எனக் கொண்டாடப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாகப் பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் நாளையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

முன்னதாக, தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி வேண்டுமென்றும் பிற மாநிலங்களில் மாநில பிறந்தநாள் கொண்டாடுவது போல தமிழ் நாட்டிற்கும் மாநில பிறந்தநாள் அறிவித்து கொண்டாட வேண்டுமென்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் தி. வேல்முருகன், மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் இதை வலியுறுத்தி வந்தனர்.  தொல் திருமாவன் கூறுகையில் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் அதேபோல் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18 ஆம் தேதியையே தமிழ்நாடு நாள் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக கொண்டாட வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மற்றும் திராவிடர் பேரவை செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பாக கி. வீரமணி வெளியிட்ட அறிக்கையில்,

1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்திய 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் செப்டம்பர் 11-ஆம் நாள் சென்னை கடற்கரையில் நுழைந்தனர் அப்போது அங்கு 15 ஆயிரம் தமிழர்கள் திரண்டு இருந்த பொதுக்கூட்ட மேடையில் தமிழ்நாடு தமிழருக்கே என தந்தை பெரியார் முழங்கினார், அப்போது நடந்த இந்தித் திணிப்பு முயற்ச்சி தமிழ்மண்ணில் மொழி உணர்வையும், இன உணர்வையும் தட்டி எழுப்பியது, தமிழ்நாடு என அப்போது பெயர் சொன்ன மாநிலம்தான் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாள் 18-7-1967,  தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்று 1955 அக்டோபர் தந்தைபெரியார் கோரிக்கை விடுத்தார், மொழிவழி மாநிலம் 1856 நவம்பர் 1 தேதியன்று உருவானது, இதன் தொடர்ச்சியாக திராவிட ஆட்சி அண்ணா தலைமையில் அமைந்ததன் விளைவாக 18 -7-1967ல்  முதல் அமைச்சர் அண்ணா தனி மசோதா ஒன்றை கொண்டுவந்து அதை சட்னமாக்கினார். ஒருமனதாக அந்த சட்டம் நிறைவேறியது. தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் 18 -7 -1967 தான், வரலாற்றில் போற்றத்தக்க பொன்னாள். எனவே தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18 திருவிழா நாளாகக் கொண்டாடுவது தான் வரலாற்று ரீதியான பொருத்தமாக இருக்க முடியும்.

நவம்பர் 1 ஆம் தேதி என்பது சென்னை மாநிலத்தில் இருந்து சில பகுதிகள் பிரிந்து சென்ற நாள், அது வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள் தான் என்றாலும், சென்னை மாநிலத்தை தமிழ் நாடு என்று ஆட்சி ரீதியாக பெயர் சூட்டப்பட்ட நாள் தான் நாம் மகிழுந்து கொண்டாடுவதற்கு உரிய வரலாற்று திருநாளாக இருக்கமுடியும். இதில் நாம் கருத்துவேறுபாடு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என வலியுறுத்தி இருந்தார். எனவே தமிழ்நாடு அரசு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாளினை அதிகாரப்பூர்வமாக கொண்டாட வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். திமுக ஆட்சியை பொருத்தவரை நாம் வலியுறுத்தி தான் இதைச் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை, எனவே இதை நிறைவேற்றி சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களிடம் தன்னுடைய வரலாற்று முத்திரையை போதிப்பார் என்று நாடே எதிர்பார்க்கிறது என அவர் கூறியிருந்தார் இந்நிலையில் முதலமைச்சர்  ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!