தீர்ப்பு என்பது நீதிபதிகளின் விளையாட்டு... தீர்ப்புகள்தான் கொடுக்கப்படுகிறது நீதி அல்ல.. சீமான் கொதிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Sep 3, 2022, 3:18 PM IST
Highlights

நீதிமன்றங்களில் தீர்ப்புதான் வழங்கப்படுகிறதே ஒழிய நீதி வழங்கப்படுவதில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

நீதிமன்றங்களில் தீர்ப்புதான் வழங்கப்படுகிறதே ஒழிய நீதி வழங்கப்படுவதில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தீர்ப்பு என்பது நீதிபதிகளின் விளையாட்டு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற பெயரில் தமிழக அரசு அறிவித்துள்ள திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தக் கோரியும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தமிழ் வழிபாட்டு உரிமையை கோரிக்கை என்ற முழக்கத்துடன் நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சி பாசறை, வீரத்தமிழ் முன்னணியும் இணைந்து தமிழகம் முழுவதும் தாய்த் தமிழில் வழிபாடு என்ற நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில் திருப்போரூர் முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  தமிழில் வழிபாடு செய்து இந்த இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார், மேலும் தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் தொகுதி, மாவட்ட, நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து பாசறையின் பொறுப்பாளர்கள் இந்து சமய அறநிலையத்துறையை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்  முதன்மை கோவில்களுக்கு குடும்பத்தினருடன் சென்று தமிழில் வழிபாடு செய்ய இன்று  வலியுறுத்தினர்.

இதையும் படியுங்கள்: தற்குறி.. சாக்கடை அரசியல் அண்ணாமலை.. அழிக்க நினைத்தவர்களை அரண்டு நடுங்க வைத்த இயக்கம் திமுக.. முரசொலி..!

முன்னதாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்ய வலியுறுத்தி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக பொதுக்குழு தொடர்பான வழங்கில் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் இது நீதிபதிகளின் விளையாட்டு, அப்பாவி மக்கள் என்ன சொல்வது, ஒரு வழக்கு, ஒரு நாடு, ஒரு சட்டம் ஆனால் எத்தனை தீர்ப்புகள் வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: "விஜயவாடா துறைமுகம்" உளறி கொட்டிய பொன்முடி... இதுகூட தெரியாதவர் உயர்கல்வி அமைச்சரா? டார்டாரா கிழிக்கும் பாஜக.

கீழமை நீதிமன்ற ஒரு தீர்ப்பு கொடுத்தால், உயர்நீதிமன்றம் ஒரு தீர்வு தருகிறது,  இப்படி மாற்றி மாற்றி பல ஆண்டுகளாக நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன. ஆனால் இதில் தீர்ப்பு வழங்கப்படுகிறதே தவிர நீதி வழங்கப்படுவதில்லை, இதற்குமேல் இதில் கருத்து சொல்ல விரும்பவில்லை, ஏன் எனில் இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்றார்.

அதேபோல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என கூறும் அரசு எந்த மொழியில் அர்ச்சனை செய்யவேண்டும் என்றும் தெரிவிக்க வேண்டும், குறிப்பாக கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களில்  இருந்து வந்து தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்  என்றால் தமிழ் தான் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்திய நாட்டின் முதன்மை மொழி தமிழ் தான் எனக்கூறும் மோடி, அதற்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.   

 

click me!