H.ராஜா அசிங்க பேச்சை வேடிக்கை பார்த்த நீதிபதிகள்.. சவுக்கு சங்கர் மீது வழக்கு போடுவது கேளி கூத்து.. தடா ரஹீம்

By Ezhilarasan BabuFirst Published Sep 9, 2022, 1:45 PM IST
Highlights

சமூக செயற்பாட்டாளர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டு வாதி மற்றும் பிரதிவாதி இரண்டு தரப்புமாக நீதிபதிகளே இருந்து தீர்ப்பு வழங்குவது கேளிக்கையாக உள்ளது என இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா ரஹீம் தெரிவித்துள்ளார்.

சமூக செயற்பாட்டாளர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டு வாதி மற்றும் பிரதிவாதி இரண்டு தரப்புமாக நீதிபதிகளே இருந்து தீர்ப்பு வழங்குவது கேளிக்கையாக உள்ளது என இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா ரஹீம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

நீதிபதிகளின் செயல்பாடுகளைத் திறனாய்வு செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளால் அத்தகைய உரிமை சிதைந்து போவதை நாம் எப்பொழுதும் அனுமதிக்கக் கூடாது. இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதியரசர் GR சுவாமிநாதன் மற்றும் நீதியரசர் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் சவுக்கு சங்கர் மீது நடந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விசாரணை குறித்த தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன.

இதையும் படியுங்கள்: ஒன்றிய அரசின் பிடிவாதம்தான் மாணவர்கள் மரணத்திற்கு காரணம்.. வேண்டாத் தற்கொலை.. தலையில் அடித்துக் கதறும் வைகோ.

ஒரு குடிமகன் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என்பதைப் பட்டியலிட்டுக் காட்டினால் அவருக்கெதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பாய்வதில் எந்த நியாயமும் இல்லை. உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் வலுக்கும் நிலையில் , நீதிமன்ற விசாரணை குறித்துக் குற்றம் சாட்டப்பட்டவர் எந்த பேட்டியும் அளிக்கக்கூடாது என்று நீதிபதிகள் சொல்வது அழகல்ல.

இதையும் படியுங்கள்: சசிகலாவுடன் ஓபிஎஸ் அணியின் முதல் சந்திப்பு... அதிர்ச்சியில் இபிஎஸ்

அரசியல் வாதிகளின் கால் கைகளை பிடித்து நீதிபதிகளாக வருகின்றனர் என ஆடிட்டர் குருமூர்த்தி சொன்னபோது அமைதி காத்த நீதிபதிகள். கோர்ட்டாவது மயிராவது என பொது மக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன் பேசிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா மீது அவமதிப்பு வழக்கு போடாமல் அமைதி காத்த நீதிபதிகள்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் சமூக நீதிக்கு இடமில்லையா என சவுக்கு சங்கர் கேள்வி எழுப்புவது எப்படி நீதிமன்ற அவமதிப்பு வழக்காகும் ? ஆகையால் சமூக செயற்பாட்டாளர் சவுக்கு சங்கர் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனே ரத்து செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம் இவ்வாறு தடா ரஹீம் கோரிக்கை வைத்துள்ளார். 
 

click me!