பத்திரிகையாளர்கள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும்... மேற்குவங்க முதல்வர் மம்தா..!!

By Thiraviaraj RMFirst Published May 3, 2020, 11:25 PM IST
Highlights

ஜனநாயகத்தில் பத்திரிகையின் பங்கு பாராட்டுக்குரியது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பத்திரிகை உள்ளது. அதன் கடமைகளை அச்சமின்றி செயலாற்ற வேண்டும். சமூகத்திற்கு அளித்த பங்களிப்புகளுக்காக அவர்களை நாங்கள் மதிக்கிறோம்

T.Balamurukan

பத்திரிகையாளர்கள் அச்சமின்றி தங்கள் கடமைகளை செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளை கட்டிக்காப்பது; பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தடுப்பது போன்ற நோக்கத்துடன் ஐ.நா.சபை சார்பில் 1993 முதல், மே 3ம் தேதி, சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது.


இந்நிலையில், மம்தா டுவிட்டரில்.., "ஜனநாயகத்தில் பத்திரிகையின் பங்கு பாராட்டுக்குரியது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பத்திரிகை உள்ளது. அதன் கடமைகளை அச்சமின்றி செயலாற்ற வேண்டும். சமூகத்திற்கு அளித்த பங்களிப்புகளுக்காக அவர்களை நாங்கள் மதிக்கிறோம்". இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
 

click me!