மதுரை மீனாட்சிக்கு நாளை பக்தர்கள் இல்லா, பட்டர்கள் மட்டுமே திருக்கல்யாணம். பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பு

By Thiraviaraj RMFirst Published May 3, 2020, 10:54 PM IST
Highlights

சித்திரை திருவிழா தமிழ்சமூகத்தின் அடையாளம். தமிழகமே சித்திரை திருவிழாவை காண கூடிநிற்கும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன்பாக மதுரை மீனாட்சியம்மனுக்கும் சொக்கநாதருக்கும் திருக்கல்யாணம் காண ஆயிரம் கண்கள் பற்றாது. நான்கு வீதிகளுலும் எங்கு பார்த்தாலும் தலைகள் மட்டுமே காணமுடியும்.

T.Balamurukan

சித்திரை திருவிழா தமிழ்சமூகத்தின் அடையாளம். தமிழகமே சித்திரை திருவிழாவை காண கூடிநிற்கும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன்பாக மதுரை மீனாட்சியம்மனுக்கும் சொக்கநாதருக்கும் திருக்கல்யாணம் காண ஆயிரம் கண்கள் பற்றாது. நான்கு வீதிகளுலும் எங்கு பார்த்தாலும் தலைகள் மட்டுமே காணமுடியும். நகரம் முழுவதும் செல்லும் இடமெல்லாம் குடிதண்ணீர்,புளியோதரை, எலுமிச்சை சாதம்,வென்பொங்கல்,குளிர்பானங்கள் என திரும்பிய பக்கமெல்லாம் எதாவது ஒரு உணவு கிடைத்துக்கொண்டே இருக்கும். திருக்கல்யாணத்தை பார்க்க பெண்கள் அதிகாலையிலே கோயிலுக்குள் சித்திரை வெளியிலையும் பொருட்படுத்தாமல் குவிந்து கொண்டிருப்பார்கள். அப்படிபட்ட மீனாட்சி திருக்கல்யாணம் முதன் முறையாக இணையத்தின் வாயிலாக பார்க்க இருக்கிறோம். பக்கதர்கள் இல்லா திருக்கல்யாணம்.பட்டர்கள் மட்டுமே நடத்தும் திருக்கல்யாணமாக நாளை காலை 8.30மணிக்கு நடக்க இருக்கிறது. 


பக்தர்களை கட்டுப்படுத்த முடியாது என்பதால் நான்கு சித்திரை வீதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது.முதன் முறையாக மீனாட்சியம்மன் கோவிலை சுற்றிலும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி தடுப்புகள் அமைத்து காவல்துறை கண்காணித்து வருகிறது. திருக்கல்யாணத்துக்கு பாஸ் வழங்குவதில் முறைகேடு நடப்பதும், வெளியில் அதிகவிலைக்கு பாஸ் விற்பனை செய்வதற்கும்,ஏவி பாலத்தில் போலீஸாரின் குடும்பங்கள் மட்டுமே குவிந்து கொண்டு கள்ளழகரை தரிசனம் செய்வதற்கும் இந்தாண்டு கொரோனா தடை செய்திருக்கிறது.

click me!