Jothimani: ஜோதிமணியின் ஓவர் சீன்..!! கலெக்டர் சமாதானம் செய்தும் பருப்பு வேகவில்லை..!

By vinoth kumarFirst Published Nov 26, 2021, 1:23 PM IST
Highlights

ஜோதிமணி எம்.பி. கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியருக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் ஆட்சியர் தடுக்கிறார். அவர் முறைகேடுகளில் ஈடுபடுவதால் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு புகார் கடிதம் எழுதியிருந்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் கரூர் எம்.பி. ஜோதிமணி அரசாங்கத்தோடு முட்டல் மோதல்கள் இருந்து வந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியில் அதைய தொடர்ந்து வருகிறார். இது பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அலிம்கோ நிறுவனம் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கரூரில் இத்திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான முகாம்களை நடத்த கோரி மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம், ஜோதிமணி எம்.பி. பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஆனால் மாற்றுத்திறனாளி முகாம்களை மாவட்ட ஆட்சியர் நடத்தவில்லை. இதனால் கரூர் மாவட்ட ஆட்சியர் மீது ஜோதிமணி எம்.பி. கடும் விரக்தி அடைந்தார். 

இந்நிலையில்,  இந்த பணிகளை செய்ய விடாமல் கரூர் மாவட்ட ஆட்சியர் தனக்கு இடையூறு விளைவிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டினார். இதனையடுத்து, ஜோதிமணி எம்.பி. கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியருக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் ஆட்சியர் தடுக்கிறார். அவர் முறைகேடுகளில் ஈடுபடுவதால் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு புகார் கடிதம் எழுதியிருந்தார். 

இதனையடுத்து, கரூர் ஆட்சியர் வந்து தர்ணாவில் ஈடுபட்ட ஜோதிமணி எம்.பி.யிடம் சமாதானம் பேசி தர்ணாவை முடித்து கொள்ளும்படி கூறினார். ஆனால் ஜோதிமணி எம்.பி மறுத்து விட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கரூர் எம்.பி. ஜோதிமணி;- அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் ஊழல் கறைபடிந்த அதிகாரிகள் இன்னும் உள்ளார்கள் என்று ஜோதிமணி எம்.பி. பரபரப்பு குற்றம்சாட்டினார். இதையடுத்து நேற்று இரவு ஆட்சியர் அலுவலகத்திலேயே உறங்கி அங்கேயே ஜோதிமணி போராட்டம் செய்தார். அதோடு அங்கேயே லேப்டாப் மூலம் தனது அலுவலக பணிகளையும் மேற்கொண்டார். தொடர்ந்து 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். 


ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. அக்கட்சியை சேர்ந்த ஜோதிமணி கலெக்டருடன் மல்லுகட்டுகிறார்கள் என்றால் ஆளுங்கட்சியோடு மோதுவதாகவே என்று அர்த்தம். இத்தனைக்கும் மாவட்ட அமைச்சரும், திமுக பொறுப்பாளருமான செந்தில் பாலாஜியுடன் நல்ல நட்பில் இருப்பவர் ஜோதிமணி. இந்த சூழ்நிலையில் தனக்கு நேர்ந்த குறைபாட்டை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சரிசெய்திருக்கலாம். ஆனால், மாவட்ட ஆட்சியர் சமாதானம் செய்தும் ஜோதிமணி இறங்கிவராதது எதிர்க்கட்சிகளின் வாயிற்கு அவல் கொடுத்தது போல உள்ளது. விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கரூரில் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் இடையே மனத்தாங்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. 

மேலும்,  ஆளுங்கட்சியின் முதல்வர் தங்களுடைய கூட்டணி கட்சி என தெரிந்தும் வேண்டுமென்றே அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் ஜோதிமணி தொடர்ந்து செய்து கொண்டே வருகிறார். இது உள்நோக்கம் கொண்டது எனவும் திமுக உடன்பிறப்புகள் கூறிவருகின்றனர். 

click me!