தேர்வு செய்யப்பட்ட போலீஸ் எல்லம் உடனே ஜாயிண்ட் பண்ணுங்க... தமிழக அரசு உத்தரவு.!!

By Thiraviaraj RMFirst Published Apr 27, 2020, 11:34 PM IST
Highlights

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இன்ஸ்பெக்டர்,போலீசார் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்கள் தொடர்ந்து சிவப்பு மண்டலங்களாக இருந்து வருகிறது.
 

T.Balamurukan
தமிழகத்தில் கொரோனா தொற்றுதமிழகத்தில் புதிதாக மேலும் 64 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1937 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் புதிதாக 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னையில் தான் அதிகபட்சமாக 570 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1020 பேர் குணமடைந்துள்ளனர்.தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இன்ஸ்பெக்டர்,போலீசார் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்கள் தொடர்ந்து சிவப்பு மண்டலங்களாக இருந்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் பணி ரெம்பவே முக்கியமாக இருந்து வருகிறது. அவர்களுக்கு பணி பளு அதிகரித்துள்ளதால் காவலர்கள் மன அழுத்ததில் இருக்கிறார்கள். லீவு கிடைக்காமல் தொடர் பணியில் இருப்பதால் தமிழக அரசு தேர்வாகி இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  பயிற்சியில் இருக்கும் 8538 பேரும் மே 3-ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என்றும்  ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பணிகளுக்காக புதிய காவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாக  தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

பணியில் சேருவதற்கு முன்பாக 8538 பேருக்கும் சுவாச பிரச்சினை மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்வது கட்டாயம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

click me!