கமிசனுக்காக மத்திய மாநில அரசுகள் வாங்கிய ரேபிட் கிட்.!! கமிசன் போன கவலையில் அதிகாரிகள்,அமைச்சர்கள்.!!

By Thiraviaraj RMFirst Published Apr 27, 2020, 8:43 PM IST
Highlights

சீனா அரசாங்கமே ரேபிட் கிட் சரியான ரிசல்ட்டை கொடுக்கவில்லை என்றும் அங்குள்ள பல நிறுவனங்களை ரேபிட் கிட் தயாரிக்க வேண்டாம் என்றும் அவர்களுக்கான அக்ரிமெண்டை ரத்து செய்த சம்பவம் எல்லாம் சீனாவில் அரங்கேறியிருக்கிறது. இப்படிபட்ட கிட்டை இந்தியா வரிசையில் நின்று வாங்கியிருப்பது கொடுமை தான். இந்த கொடுமையைவிட இதிலும் கமிசன் பார்த்த அதிகாரிகள்,அமைச்சர்களை கொரோனாவில் இறந்தவர்களின் ஆன்மா எத்தனை ஜென்மம் ஆனாலும் மன்னிக்காது. 

T.Balamurukan

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்து விட்ட நிலையில்,  பலி எண்ணிக்கை 872 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனாம் சமூக பரவலாகி விடக்கூடாது என்பதற்காக வீடுதோறும் கணக்கெடுக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.கொரோனா வார்டுகளில் தனிமைப்படுத்துள்ள நோயாளிகள் அனைவருக்கும்  பரிசோதனையை விரைவாக நடத்த சீனாவிடம் இருந்து 30 லட்சம் ரேபிட் கிட்டுகளை இந்தியா வாங்கியது. அந்த ரேபிட் கிட்கள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சீனாவின் ரேபிட் கிட்டுகளில் பரிசோதனை முடிவுகள் துல்லியம் இல்லை என மகாராஷ்ட்ரா.உ.பி போன்ற மாநிலங்களில் இருந்து புகார் எழுந்தது. இதை தொடர்ந்து  அந்த சோதனைகளை நிறுத்திவைக்க இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது.


சீனாவில் இருந்து வாங்கிய ரேபிட் கிட்டுகளுக்கு இந்திய இரண்டு மடங்கு பணம் அளித்து உள்ளது என தற்போது தெரியவந்து உள்ளது. கொரோனா சோதனை கருவிகள் இந்திய விநியோகஸ்தரால் அதிக விலைக்கு அரசிற்கு விற்கப்பட்டு  உள்ளது.தமிழகம் வாங்கிய ரேபிட் கிட் விலை அளவுக்கு அதிகமாக விலை கொடுத்துவாங்கியதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.


 
இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் " கொரோனா வைரஸ் பெருந்தொற்று பேரிடருக்கு எதிராக தேசமே போராடி வருகிறது. ஆனால், இன்னும் சிலர் இந்த நேரத்தில் கூட லாபம் சம்பாதிக்கிறார்கள்.இதுபோன்ற ஊழல் மிக்கவர்களின் மனநிலையைப் பார்த்து வெட்கப்படுகிறேன். சிலர் 150 சதவீத லாபத்தில் கருவிகளை விற்றுள்ளனர். பிரதமர் மோடி இதில் தலையிட்டு கொள்ளை லாபம் சம்பாதித்தவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற செயலை தேசம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது”  என்று கூறியுள்ளார்.

இரண்டு சீன நிறுவனங்களான குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக் மற்றும் ஜுஹாய் லிவ்ஸன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளை  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் (ஐ.சி.எம்.ஆர்) "குறைவான செயல்திறன்" கொண்டவை என்று  அறிவிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீனா அரசாங்கமே ரேபிட் கிட் சரியான ரிசல்ட்டை கொடுக்கவில்லை என்றும் அங்குள்ள பல நிறுவனங்களை ரேபிட் கிட் தயாரிக்க வேண்டாம் என்றும் அவர்களுக்கான அக்ரிமெண்டை ரத்து செய்த சம்பவம் எல்லாம் சீனாவில் அரங்கேறியிருக்கிறது. இப்படிபட்ட கிட்டை இந்தியா வரிசையில் நின்று வாங்கியிருப்பது கொடுமை தான். இந்த கொடுமையைவிட இதிலும் கமிசன் பார்த்த அதிகாரிகள்,அமைச்சர்களை கொரோனாவில் இறந்தவர்களின் ஆன்மா எத்தனை ஜென்மம் ஆனாலும் மன்னிக்காது.கமிசன் பறிபோன கவலையில் அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரையிலும் சோகத்தில் இருக்கிறார்களாம். 24ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை தமிழக அரசு திருப்பி அனுப்பியுள்ளதாகவும்,இதனால் அரசுக்கு ஒரு ரூபாய் கூட நஷ்டம் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


 

click me!