
கல்பாக்கம் அடுத்துள்ள கூவத்தூர் பகுதியில் கோல்டன் ரிசார்டிலிருந்து எஸ்கேப் ஆனார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.
சுமார் 110 எம்.எல்.ஏக்களை சசிகலா தரப்பு இங்குதான் சிறை வைத்திருந்தனர்.
இதனால் அதிமுக கட்சியே ஓ.பி.எஸ் வசம் வந்துவிட்டது போல ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.
சசிகலா குடும்பத்தால் அமைச்சர் ஜெயகுமார் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார் ஜெயக்குமார்.
சசிகலா கும்பத்தின் சித்துவேலையால் சிக்கி சின்னா பின்னமானார் சபாநாயகராக இருந்த ஜெயகுமார்.
மேலும் ஜெயலலிதாவிடம் நம்பர் 3 ஆக இருந்த ஜெயகுமார் தரைமட்டத்திற்கு ஆளாகி உள்ளார்.
சினிமா பாணியில் ஓ.பி.எஸ்க்கு பெருகும் ஆதரவை பார்த்த ஜெயகுமார் சசிகலா தரப்பில் இருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
மதியம் 2 மணிக்கு காரில் இருந்து கிளம்பிய ஜெயகுமார் மீண்டும் வரவே இல்லை.
ஒருவேளை ஓபி.எஸ்ஸிடம் வந்துவிட்டால் அவருடன் குறைந்தது 5 எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து விடுவார்கள் என கூறப்படுகிறது.
ஓ.பி.எஸ் கரம் ஓங்கி வருவதால் அதிக எம்.எல்.ஏக்கள் கையில் வைத்திருக்கும் சசிகலா தரப்பு கதிகலங்கி உள்ளது.