எனக்கு வாய் கொழுப்பு..ஜெயக்குமாருக்கு பணக் கொழுப்பு... மரியாதையை கெடுத்துக்காத.. எகிறிய சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Aug 3, 2022, 3:12 PM IST
Highlights

எனக்கு வாய்க்கொழுப்பு, ஆனால் ஜெயக்குமாருக்கு பண கொழுப்பு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும் ஜெயகுமார் மீது எனக்கு மரியாதை இருக்கிறது, அதை அவர் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் சீமான் எச்சரித்துள்ளார்.

எனக்கு வாய்க்கொழுப்பு, ஆனால் ஜெயக்குமாருக்கு பண கொழுப்பு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும் ஜெயகுமார் மீது எனக்கு மரியாதை இருக்கிறது, அதை அவர் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் சீமான் எச்சரித்துள்ளார்.

அதிமுக தலைவர்களை விமர்சித்த சீமானுக்கு வாய்க்கொழுப்பு அதிகம் என ஜெயக்குமார் பேசியிருந்த நிலையில் சீமான் இவ்வாறு கூறியுள்ளார். சமீபத்தில் அதிமுக முன்னாள் தலைவர்களை சீமான் விமர்சித்திருந்தார். அதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார், அதற்கு பதிலளித்த அவர், மறைந்த அதிமுக தலைவர்களை சீமான் விமர்சித்துள்ளார், அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது, சீமானுக்கு வாய்க்கொழுப்பு அதிகம், அவரின் பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது, சீமான் தனது வாய்க்கொழுப்பை அதிமுகவுடன் காட்டவேண்டாம், திமுகவிடம் காட்டட்டும், இல்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.

இந்நிலையில் தீரன் சின்னமலையின் 217 வது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெரிய மக்கள் படையை உருவாக்கி வெள்ளையர்களை எதிர்த்தவர்தான் தீரன் சின்னமலை, அவரின் நினைவுகளே நாம் பொற்ற வேண்டும், தமிழகத்தை பெரியார் மண் அண்ணா மண் என்று சொல்லிக்கொண்டு எதையும் செய்யாமல் உள்ளனர்.

பெரியார் இருப்பார் ஆனால் மண் இருக்காது என்றார். அப்போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தங்களுக்கு வாய்க்கொழுப்பு என கூறியிருக்கிறாரே என  செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆமாம் எனக்கு வாய்க்கொழுப்பு, ஜெயக்குமாருக்கு பண கொழுப்பு, ஜெயக்குமார் மீது எனக்கு ஓரளவுக்கு மரியாதை இருக்கிறது, அதை அவர்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது, எங்கிட்ட ஒரு மயிரும் கிடையாது,  என்னை எதிர்த்துப் பேசிய நீ பிஜேபியை எதிர்த்து பேசுவியா? என்னிடம் இழப்பதற்கு எதுவும் கிடையாது உயிரை தவிர. மயிரும் உயிரும் உதிர்ந்தால் ஒன்றுதான் என நான் படித்துள்ளேன்.

ஜெயகுமார் சும்மா பேசணும்னு பேசக்கூடாது, ஸ்டாலின், பிஜேபியை பேசினால் ஸ்ட்ரெய்ட்டா ரெய்டு வரும், ஆனால் என்னை பேசினால் ஒன்றும் வராது. ஜெயக்குமாரை மதிக்கிறேன் அதனால் அவர் என்னை பேசுகிறார், நீங்கள் பணத்தை முன்னிறுத்துகிறீர்கள் நாங்கள் மானமுள்ள தமிழினத்தை முன் நிறுத்துகிறோம். இங்கு திமுக, அதிமுக, பிஜேபி என யாருக்குமே தனித்துப் போட்டியிட திராணி இல்லை.

ஆனால் எங்களுக்கு திராணி இருக்கிறது, நாங்கள் மக்களை நம்புகிறோம் அதனால் தனித்து போட்டியிடுகிறோம், நீங்கள் மக்களை நம்பவில்லை உங்களிடம் உறுதியான கோட்பாடுகளால் இல்லை, இருந்தால் அதை வைத்து மக்களிடம் வாக்குக் கேளுங்கள் பார்க்கலாம், ஆனால் எங்களிடம் அது இருக்கிறது, உங்களிடம் கொள்கை இல்லை, கோடிகள்தான் இருக்கிறது ஆனால் எங்களிடம் கொள்கை இருக்கிறது இவ்வாறு அவர் காட்டமாக பேசினார். 
 

click me!