நகைக்கடன் தள்ளுபடி.. மகிழ்ச்சியான செய்தி மக்களே.. வெளியான அதிரடி அறிவிப்பு !

By Raghupati RFirst Published Dec 25, 2021, 8:31 AM IST
Highlights

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் வாங்கிய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றோரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்த பிறகு அதுதொடர்பான வேளைகளில் மும்முரமாக இறங்கியது.இதனை அடுத்து நகைக்கடன் எப்போது செய்யப்படும் என்றும் மக்களிடையே எதிர்பார்த்து எழுந்து வருகிறது.

இதுகுறித்து பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி , ‘ 5 பவுன் நகைகளை திரும்ப கொடுக்க பட்டியல் தயார் செய்து தணிக்கை துறை மூலம் சரிபார்க்கப்பட்டுள்ளது. விரைவில் நகைகள் திரும்ப ஒப்படைக்கப்படும்.அநேகமாக வரும் திங்கள் கிழமை முதல் இது நடைமுறைக்கு வரும். கொடைக்கானல் பாச்சலுாரில் உயிரிழந்த பள்ளிச்சிறுமி வழக்கில் விசாரணை நடக்கிறது. தமிழ்நாடு போலீசால் செய்ய முடியாததை வேறு எந்த போலீசால் செய்ய முடியும். சி.பி.சி.ஐ.டி விசாரணையில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும். 

கொடைக்கானல் மலைப்பகுதியில் யானைகள் இரவு நேரத்தில் விவசாய தோட்டங்களுக்கு புகுந்து சேதப்படுத்துவதை தடுக்க பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆன்லைனில் பதிவு செய்து மணல் பெறும் வசதியை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் கட்டுமான பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு என்ற நிலை இருக்காது’ என்று கூறினார்.வருகின்ற திங்கள் கிழமை முதல் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் அனைத்திலும் நகைகள் வாங்கிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு தமிழக மக்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்து இருக்கிறது.

click me!