IT Raid: அதிர்ச்சி.. தேமுதிக பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..!

Published : Dec 16, 2021, 02:20 PM IST
IT Raid: அதிர்ச்சி.. தேமுதிக பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..!

சுருக்கம்

கடலூரில் தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கருக்கு சொந்தமான நிதி நிறுவனம், பள்ளி, சினிமா தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

கடலூரில் தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கருக்கு சொந்தமான நிதி நிறுவனம், பள்ளி, சினிமா தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஜெயபிரியா என்ற நிதி நிறுவனம் 1985ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த ஜெயபிரியா நிதி நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் 51 கிளைகள் உள்ளன. 1985ம் ஆண்டு சிறிய அளவில் தொடங்கப்பட்ட நிறுவனம் படிப்படியாக வளர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் தனது கிளைகளை நிறுவி உள்ளார். 

ஜெயபிரியா நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ரூட்டி, விருதாச்சலம், நெல்வேலி, சிதம்பரம், திட்டக்குடி, வடலூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த குழுமத்திற்கு சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், உணவு பொருட்கள் தயாரிப்பு, திருமண மண்டபகங்கள் உள்ளிட்ட தொழில்கள் உள்ளன.

இதனால், நிறுவனங்களில் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், 50க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜெய்சங்கர் தேமுதிக கட்சியின் முக்கிய பதவியில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டு கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!
நான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது... அது ‘பூணூல்’..! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்