நீ பற்றவைத்த நெருப்பொன்று பற்றி எரிகிறதே ஜெய் ஆனந்தா! ’ஜெ. சிகிச்சை சிடி’ ரகசியத்த சொல்லி மொத்தமா சிக்க வச்சிட்டியே...

Asianet News Tamil  
Published : Nov 13, 2017, 02:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
நீ பற்றவைத்த நெருப்பொன்று பற்றி எரிகிறதே ஜெய் ஆனந்தா! ’ஜெ. சிகிச்சை சிடி’ ரகசியத்த சொல்லி மொத்தமா சிக்க வச்சிட்டியே...

சுருக்கம்

Jayananth face book is the reason for it raid..

நீ பற்றவைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனை கேட்கும். நீ விதைத்த வினை எல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்" என மெர்சல் படத்தில் விஜய் பேசும் வசனம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ திவாகரன் மகன் ஜெய்ஆனந்த் க்கு பொருந்தும். ஆம்

ஜெ. சிகிச்சை பெறும்  சிடியை வெளியிடுவேன்… அப்ப என்ன ஆகும் தெரியும்ல  என்று சசிகலாவின் சகோதரர் மகன்  ஜெயானந்த் வெளியிட்ட முகநூல் பதிவு இன்று சசிகலா குடும்பத்தில் வருமான வரித்துறை வளைத்து வளைத்து ரெய்டு நடத்துவதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார்.  ஆனால் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் கொளுத்திப்போட அது பற்றி எறிய்த் தொடங்கியது.

இதையடுத்து ஓபிஎஸ் – இபிஎஸ் இணைப்பு நாடகத்தின் ஒரு பகுதியாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரைணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு ஒன்றை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த சிடி தங்களிடம் இருப்பதாக திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் அதிரடியாக தெரிவித்திருந்தார்.

ஜெயானந்தி வெளியிட்ட இந்தப் பதிவை வேறு வழியில்லாமல் சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினரும் ஒத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் அந்த சிடியை வெளியிட்டால் சசிகலா குற்றமற்றவர் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும் என அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது ஜெயானந்த் கொளுத்திப்போட்ட இந்தப் பதிவுதான வருமான வரித்துறையினர் வளைத்து வளைத்து ரெய்டு நடத்துவதாக நம்பப்படுகிறது. ஆப்ரேஷன் கிளீன் மணி என்ற பெயரில் அதிகாரிகள் சோதனை நடத்தினாலும், இதற்கு உண்மையான காணம் சிடி தான் என தினகரன் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம்  திவாகரன் மற்றும் தினகரன் இடையே நடக்கும் பனிபோரையே காட்டுவதாக விவரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஒட்டுமொத்த சசிகலா குடும்பமும் ரெய்டில் சிக்கித் தவிக்கிறது. குறிப்பாக இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா மற்றும் அவரைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் வருமான வரித்துறையினரிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயானந்த் இப்படி ஒரு காரியத்தை செய்யவில்லை என்றால் பிரச்சனைகள் எதுவுமே இல்லாமலேயே இருந்திருக்கும் என தினகரன் தரப்பினர் உறுதியாக நம்புகின்றனர்.

நீ பற்றவைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனை கேட்கும். நீ விதைத்த வினை எல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்" என மெர்சல் படத்தில் விஜய் பேசும் வசனம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ திவாகரன் மகன் ஜெய்ஆனந்த் க்கு பொருந்தும்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

ஈரானில் 153 நகரங்களில் 1,000 இடங்களில் தாக்குதல்.. சூறையாடும் அமெரிக்க-இஸ்ரேல்..!
திமுக ஆட்சியில் ரத்த ஆறு.. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வக்கில்லாத முதல்வர்.. இபிஎஸ் ஆவேசம்!