
மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த அனிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நீட் தேர்வின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றதால் தமது மருத்துவ கனவு கலைந்து விட்டதே என நினைத்து அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் தமிழகம் முழுவதும் மாணவ மாணவிகள், இளைஞர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அரசியல் கட்சிகளும் சினிமா பிரபலங்களும் நீட்டுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
அனிதாவின் மரணத்தின் போது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சென்று அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதைதொடர்ந்து நடிகர்கள் சில அரசியல் கட்சி தலைவர்கள் அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
அந்த வரிசையில், மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த அனிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.