பாஜகவை பின்னுக்குத்தள்ளிய ஜெயலலிதா... உதவியவர்களுக்கே இப்படியென்றால் எதிரிகள் நிலை..? ஃப்ளாஷ்பேக்..!

By Thiraviaraj RMFirst Published Jul 12, 2020, 11:28 AM IST
Highlights

அன்டோனியோ மெய்னோ என பொதுக்கூட்டங்களில் பாஜக காரர்கள் கூட சொல்ல மாட்டார்கள். ஜெ. அளவுக்கு சோனியாகாந்தியை பர்சனலாக தாக்கி தமிழ்நாட்டில் யாருமே பேசியதில்லை.

1993ல் ஜெயலலிதா மதுரையில் அதிமுக தொடங்கி 20 ஆண்டுகள் ஆனதையொட்டி வீர வரலாற்றின் வெற்றி மாநாடு என்ற ஒன்றை நடத்தினார். அம்மாநாட்டில் ஜெ. எல்லோரும் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் படு கொலை செய்ததால், அந்த அனுதாப அலையில் நாங்கள் வென்றதாகச் சொல்கிறார்கள். ஆனால் என்னால் தான் அதிமுகவெற்றி பெற்றது என்றார்.

(அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை மீட்டுக் கொடுத்து, இன்னும் மூன்று ஆண்டுகள் மீதமிருந்த திமுக ஆட்சியை, விடுதலைப்புலிகளின் நடமாட்டம்/வன்முறை தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது என அப்போது அவர்களின் ஆதரவில் ஆண்ட சந்திர சேகரை மிரட்டி கலைத்து தேர்தலுக்குஏற்பாடு செய்தவரே ராஜீவ் தான்).  அப்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், சிதம்பரம் போன்றோர் இதற்காக லேசாக முணுமுணுத்தனர். அதன் பின் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியிலேயே ஜெயா காங்கிரஸ் என்ற ஒன்றை உருவாக்கி, மற்றவர்களை டார்ச்சர் செய்யத்துவங்கினார்.

பல.முறை குண்டுக்கட்டாக காங்கிரஸ் எம் எல் ஏக்களை தூக்கி வீசினார்கள். இத்தனைக்கும் அந்தக் கட்சி அப்போது மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்தது. சிதம்பரத்தை ஒரு குரூப் ஆயுதங்களுடன் தாக்கியது. தாக்கிய இளவரசன் என்பவருக்கு உடனே பதவி கொடுத்தார் ஜெ. அப்போது நெடுஞ்சாலைகளில் கொள்ளைநடைபெற்றது.

 பிரதமர், என் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்று இப்படி வடமாநில கொள்ளையர்களை அனுப்புகிறார் என்றார். இவரைச் சமாளிக்க சென்னா ரெட்டி என்ற ஹெவி வெயிட்டை இறக்குவோம் என ஆந்திர மாநில முன்னாள் முதல்வரை கவர்னராக்கினார்கள். அவர் என்னைக் கையை பிடித்து இழுத்தார் என ஒரே போடாக போட்டு அவரை ஆப் செய்தார் ஜெயா. தன்னை அரசியலில் நிலைப்படுத்தி, தனக்காக ஒரு ஆட்சியையும் கலைத்து, பிரச்சாரத்துக்கு வந்து உயிரையும் கொடுத்த தலைவருக்கும், அவர் கட்சியினருக்கும் ஜெ. செய்த மறு சீரே இப்படியென்றால் எதிர்க்கருத்து கொண்டவர்களை சும்மாவா விடுவார்.

அது மட்டுமா, சோனியா காந்தியை பல முறை அவமானப்படுத்தினார். அன்டோனியோ மெய்னோ என பொதுக்கூட்டங்களில் பாஜக காரர்கள் கூட சொல்ல மாட்டார்கள். ஜெ. அளவுக்கு சோனியாகாந்தியை பர்சனலாக தாக்கி தமிழ்நாட்டில் யாருமே பேசியதில்லை. 99 பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சார நேரம் பிக்ஸ் பண்ணிட்டு வேணுமின்னே டிலே பண்ணி அசிங்கப்படுத்தி விட்டார். அதோட போனது தான் சோனியா.

click me!