சட்டப்பேரவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் அள்ளும்...அதிமுக தோற்றாலும் அழியாது...திருநாவுக்கரசர் தாறுமாறு கணிப்பு.!

By Asianet TamilFirst Published Jul 12, 2020, 9:23 AM IST
Highlights

“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் வித்தியாசமானது. இப்போது அதிமுகவில் மாஸ் தலைவர்கள் யாரும் இல்லை. பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு வளர்ந்த தலைவர்களும் இல்லை. இப்போது எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கும் எல்லா எம்..எல்.ஏ.க்களும் ஜெயலலிதாவால் வெற்றி பெற்றவர்கள். இன்னும் 9 மாதங்களில் வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடியின் பழனிச்சாமி எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருப்பார் என்பதை பார்க்கப்போகிறோம்."
 

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடையும். ஆனால், அக்கட்சி அழிந்துவிடாது என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் திருச்சி எம்.பி.யுமான சு. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சு. திருநாவுக்கரசர் நாளை 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் பிரபலமான ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அதிமுகவின் எதிர்காலம் பற்றிய கேள்விக்கு, “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் வித்தியாசமானது. இப்போது அதிமுகவில் மாஸ் தலைவர்கள் யாரும் இல்லை. பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு வளர்ந்த தலைவர்களும் இல்லை. இப்போது எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கும் எல்லா எம்..எல்.ஏ.க்களும் ஜெயலலிதாவால் வெற்றி பெற்றவர்கள். இன்னும் 9 மாதங்களில் வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடியின் பழனிச்சாமி எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருப்பார் என்பதை பார்க்கப்போகிறோம்.


மீண்டும் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்கும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் செயல்பாடுகளை பொறுத்துதான் அதிமுகவின் எதிர்காலம் உள்ளது. அதன்பிறகுதான் தரமான தலைவரை அக்கட்சி பெறும். அதிமுக அழிந்துபோய்விடாது என்பது என்னுடைய கணிப்பு. மாநிலம் முழுவதும் அதிமுகவுக்கு தொண்டர்களும் நிர்வாகிகளும் இருக்கிறார்கள். ஆனால், கட்சியின் வலிமையை சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு செய்யும்.” என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

 
சட்டபேரவைத் தேர்தல் கூட்டணி பற்றிய கேள்விக்கு, “திமுக - காங்கிரஸ் ஊட்டணி தொடரும். இது என்னுடைய விருப்பமும் கூட. வரும் சட்டப்பேரவைத் தேர்தல் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முதன் முறையாக மு.க. ஸ்டாலின் - எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தேர்தலை சொந்த பலத்தில் எதிர்கொள்ள இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் இருந்ததைப் போல தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை, பாஜக எதிர்ப்பு, ராகுல் ஆதரவு, காங்கிரஸ் அலை என்று எந்தக் காரணிகளும் வேலை செய்யாது. திமுகவில் எந்தப் பிளவும் இல்லை. அக்கட்சி வலிமையாக உள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தால், மகத்தான வெற்றியைப் பெறுவோம்.” என்று திரு நாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

click me!