தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு... ஒரு கடையும் திறந்திருக்காது மக்களே..!

Published : Jul 12, 2020, 08:57 AM ISTUpdated : Jul 12, 2020, 09:01 AM IST
தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு... ஒரு கடையும் திறந்திருக்காது மக்களே..!

சுருக்கம்

அத்தியாவசிய தேவைகளான பாலகங்கள், மருந்தகங்கள் மட்டுமே செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. காய்கறி, மளிகைக் கடைகள், உணவகங்கள் உட்பட பிற அத்தியாவசிய சேவைகளும் இன்று செயல்படாது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று காவல் துறையும் சுகாதாரத்துறையும் அறிவுறுத்தியுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது.


தமிழகத்தில் சென்னையில் மட்டுமே எகிறிவந்த கொரோனா வைரஸ் தொற்று, தற்போது பிற மாவட்டங்களிலும் வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கில் சென்னை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கொண்டு வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த 5-ம் தேதியோடு முடிந்தது. தற்போது மதுரையில் மட்டும் 12-ம் தேதி வரை முழு ஊரடங்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 
பிற மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், ஜூலை மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஜூலையில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்றும் தமிழகம் முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. நள்ளிரவு 12 மணி வரை இந்த முழு ஊரடங்கு நீடிக்கும்.


அத்தியாவசிய தேவைகளான பாலகங்கள், மருந்தகங்கள் மட்டுமே இன்று செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. காய்கறி, மளிகைக் கடைகள், உணவகங்கள், பெட்ரோல் பங்குகள் உட்பட பிற அத்தியாவசிய சேவைகளும் இன்று செயல்படாது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று காவல் துறையும் சுகாதாரத்துறையும் அறிவுறுத்தியுள்ளன.

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..