6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம்..! ஜெயலலிதா பாணியில் கெத்து காட்டும் எடப்பாடியார்..!

By Selva KathirFirst Published Nov 5, 2019, 11:25 AM IST
Highlights

பெரும்பான்மை பலம் பிரச்சனை வேறு இருந்த காரணத்தினால் அமைச்சர்களுக்கு கடிவாளம் போட முடியாத நிலையில் எடப்பாடியார் இருந்தார். ஆனால் இடைத்தேர்தல் வெற்றி கொடுத்த தெம்பு தற்போது அவரை துணிந்து முடிவு எடுக்க வைத்துள்ளது. முன்னதாக அமைச்சர் மணிகண்டனை பதவி நீக்கம் செய்து அதிரடி அரசியலில் காலடி வைத்த எடப்பாடியார் தற்போது இலாகாக்களை மாற்றுவது குறித்து யோசித்து வருகிறார்.

அமைச்சர்கள் சிலர் மீதான அதிருப்தி காரணமாக அவர்களின் இலாக்காக்களை மாற்ற எடப்பாடியார் அதிரடியாக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவை பொறுத்தவரை மாதம் ஒருமுறை அமைச்சரவை மாற்றம் இருக்கும். இதற்கு காரணம் அமைச்சராக ஒருவர் நியமிக்கப்படும் போதே அவர் மீது கார்டனுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அல்லது குறிப்பிட்ட ஒரு வேலை அவருக்கு கொடுக்கப்படும். அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்றாலோ அல்லது கொடுத்த வேலையை முடிக்கவில்லை என்றாலோ அடுத்த நிமிடம் பதவி பறிக்கப்படும்.

இதே போல் கொடுத்த டார்கெட்டை மாதம் தவறாமல் சரியாக முடித்து கார்டனுக்கு வர வேண்டியது வந்து சேர்ந்துவிட வேண்டும். இது தான் ஜெயலலிதா பாணி அரசியல். அப்படி வரவில்லை என்றால் அமைச்சர்கள் அரசியல் துறவரம் செல்வதை தவிர வேறு வழியில்லை. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அனைத்தும மாறிவிட்டது. சசிகலாவும் சிறையில் இருப்பதால் அமைச்சர்கள் வைப்பது தான் சட்டமாக இருந்தது.

பெரும்பான்மை பலம் பிரச்சனை வேறு இருந்த காரணத்தினால் அமைச்சர்களுக்கு கடிவாளம் போட முடியாத நிலையில் எடப்பாடியார் இருந்தார். ஆனால் இடைத்தேர்தல் வெற்றி கொடுத்த தெம்பு தற்போது அவரை துணிந்து முடிவு எடுக்க வைத்துள்ளது. முன்னதாக அமைச்சர் மணிகண்டனை பதவி நீக்கம் செய்து அதிரடி அரசியலில் காலடி வைத்த எடப்பாடியார் தற்போது இலாகாக்களை மாற்றுவது குறித்து யோசித்து வருகிறார்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக குறிப்பிட்ட சில டார்கெட்டுகளை எட்ட முடியவில்லை என்றால் தேர்தல் நேரத்தில் சிக்கல் ஆகிவிடும். எனவே அந்த டார்கெட்டை எட்டுவதற்கு தேவையானவற்றை கச்சிதமாக செய்பவர்களுக்கு தகுந்த இலாக்காக்களை கொடுக்க வேண்டும். அதற்கான முன்னேற்பாடாகவே ஆளுநரை, முதலமைச்சர் சந்தித்தார் என்கிறார்கள்.

இது தவிர அமைச்சர்கள் சிலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் கட்சியை கவனிப்பது இல்லை, கட்சிக்காரர்களை கவனிப்பது இல்லை, அதிமுக நிர்வாகிகளுக்கு கான்ட்ராக்ட் செல்வது இல்லை போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அமைச்சர்களுக்கும் தண்ணி காட்ட முடிவெடுத்துள்ளதாக சொல்கறிர்கள். அந்த வகையில் 6 அமைச்சர்கள் தங்கள் இலாக்காக்களை பறிகொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனராம்.

click me!