அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒற்றைத் தலைமை கூடாது என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருப்பது போல, இரட்டைத் தலைமை கூடாது என்பதில் இபிஎஸ் தீவிரமாக இருக்கிறார்.
சென்னையில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒற்றைத் தலைமை கூடாது என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருப்பது போல, இரட்டைத் தலைமை கூடாது என்பதில் இபிஎஸ் தீவிரமாக இருக்கிறார். இதனால், நாளுக்கு நாளுக்கு பரபரப்பு உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை அம்மா நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் பலர் ஓபிஎஸ்க்கு ஆதரவாக கோஷமிட்டு அதிமுகவின் பொதுச்செயலர் பதவிக்கு இபிஎஸ் தகுதியானவர் அல்ல என்றும் ஓபிஎஸ் தான் தகுதியானவர் என்றும் அம்மாவை நிரந்தர பொதுச் செயலாளர் என்ற முழக்கத்தோடு அதிமுகவின் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஜெயலலிதா நினைவிடம் வருகை தந்தனர்.
இதையும் படிங்க;- சசிகலாவை சந்திக்கிறாரா ஓபிஎஸ்? ஒரே வரியில் பதில் சொன்ன MP ரவீந்திரநாத்..!
பின்னர் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் புகுந்த 50க்கும் மேற்பட்ட அதிமுகவின் தொண்டர்கள் உடன் வந்த மகளிரணி தொண்டர்கள் ஜெயலலிதாவின் சமாதியிலிருந்து மலர்களை தூவி ஒப்பாரி பாடலை பாடினார். உடன் வந்த ஒருவர் திடீரென பெட்ரோல் உடல் மேல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதனை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து அவர் மீது அருகில் இருந்த தண்ணீரை எடுத்து மேலே ஊற்றி அவரை பாதுகாத்தனர். மேலும் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா என்று தொண்டர்கள் கோஷமிட்டபடி ஜெயலலிதாவின் சமாதியில் இருந்து காவல்துறையினரால் அழைத்து வந்தனர். அங்கிருந்து உடனே அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க;- “நான் ஓபிஎஸ் பக்கமும் இல்லை.. இபிஎஸ் பக்கமும் இல்லை..” ஒரே போடாக போட்ட ஜெயக்குமார்..!