ரூ.66 கோடிக்கே ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை... 1,000 கோடிக்கும் மேல் பதுக்கிய வேலுமணிக்கு..? திகிலில் அதிமுக.!

By Thiraviaraj RMFirst Published Aug 10, 2021, 5:43 PM IST
Highlights

அதிகாரிகள், லோக்கல் எம்.எல்.ஏ.,க்களுக்கு போக மீத தொகையில் தான் அந்த வேலை நடக்கும். ஆக, ஒரு கோடிக்கு கட்ட வேண்டிய பாலம் என வைத்துக்கொண்டால். வெறும் 25 லட்சத்தில் கட்டி முடிக்கப்படும்.

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன்னதாகவே எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கல் வரலாம்' எனப் பேசப்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிர சோதனையை நடத்தி வருகின்றனர். அதுவும் வேலுமணி சென்னைக்குச் சென்ற நேரத்தில் திடீர் சோதனை நடைபெற்று வருவது கோவை மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. `ஆளும் தி.மு.க அரசின் அடுத்த இலக்கு யாராக இருக்கும்?' எனவும் அ.தி.மு.க வட்டாரத்தில் விவாதம் தீவிரமாகியிருக்கிறது.

உயரதிகாரிகள் சிலர் இந்த சோதனை பற்றி கூறுகையில், ‘’வேலுமணி மீதோ மெகா ஊழல், எடப்பாடி பழனிசாமி மீதோ தொடரப்போகும் வழக்குகள் கடந்த காலங்களை போல இருக்காது. இவர்களின் திறனற்ற நிர்வாகத்தால் தமிழகமே சீரழிந்து விட்டது. குறிப்பாக ஊழல் என்றால் ஒரு வேலைக்கு 10 ,15 சதவிகிதம் கமிஷனாக அமைச்சர்கள் வாங்குவது வழக்கம்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி பாணியே தனி. உதாரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் வேலைக்கு  30 அல்லது 35 லட்சம் ரூபாயை லஞ்சமாக பெற்று விடுவார். மீதம் 25 சதவிகித லாபத்தை காண்ட்ராக்டர் எடுத்து கொண்டு அதிகாரிகள், லோக்கல் எம்.எல்.ஏ.,க்களுக்கு போக மீத தொகையில் தான் அந்த வேலை நடக்கும். ஆக, ஒரு கோடிக்கு கட்ட வேண்டிய பாலம் என வைத்துக்கொண்டால். வெறும் 25 லட்சத்தில் கட்டி முடிக்கப்படும்.

இது தவிர அடிப்படை பொருளாதார அறிவே இல்லாத இவர்கள் போட்ட திட்டங்களால் பல ஆயிரம் கோடிகள் மக்கள் வரிப்பணம் வீனாகி தமிழக பொருளாதாரமே படுபாதாளத்திற்கு சென்று விட்டது. எனவே ஜெயலலிதாவை விட அதிகம் சம்பாதித்த எடப்பாடி மற்றும் வேலுமணியை அவ்வளவு சீக்கிரம் இந்த அரசு விட்டு விடாது. அவர்கள் கோப்புகளை மறைத்திருக்கலாம்.  ஆனால் வேலுமணி மற்றும் எடப்பாடி குறித்த மூமெண்ட்களை இந்த அரசு பல வகையில் பின் தொடர்ந்துள்ளது. எனவே இவர்கள் இருவரும் தப்ப முடியாது என்கின்றனர். 

அதேபோல இந்த வழக்கை போட்ட ஆர்.எஸ்.பாரதி, ``நான்தான் வழக்கு போட்டேன். நான் கொடுத்த புகாரின் பேரில் சோதனை நடக்கிறது. அவர்களிடம் ஆதாரம் இருந்தால் அதனைக் காட்டட்டும். நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லையே. 66 கோடி ரூபாய்க்கே ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் தண்டனை கிடைத்தது. இது பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடு. எத்தனை சிறை தண்ட்னை கிடைக்கப் போகிறதோ பாருங்கள் எனக் கூறுகிறார். 
 

click me!