ஐயோ ஆண்டவா.. உருவானது வியர்வையினால் பரவும் புதிய வைரஸ் .. வந்தால் சங்குதான்.. அலறும் WHO...

By Ezhilarasan BabuFirst Published Aug 10, 2021, 4:33 PM IST
Highlights

இந்நிலையில் மற்றொரு கொடிய வைரஸ் அங்கு பரவிவருவது இந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த புதியவகை வைரஸ், மேற்கு ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகி இருக்கிறது என்றும், ஆனால் இதன் பரவல் விகிதமும் குறைவு என்றும் WHO கூறியுள்ளது.

எபோலா, கொரோனா போன்ற வைரஸ்களை விட மிக ஆபத்தான கொடிய வைரஸ் ஒன்று மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்கினால் 80 சதவீதம் உயிரிழப்பு ஏற்படுவது உறுதி என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தெற்கு ஆப்பிரிக்காவில் கினியாவில் தற்போது தலைகாட்ட தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் எபோலா வகையைச் சார்ந்நது என்றும், அதன் பெயர் மார்பக் என்றும் WHO விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் வீரியம் குறையாமல் இந்த வைரஸ் தீவிரமாகத் தாக்கி வருகிறது. இதுவரைக்கும் லட்சக்கணக்கானோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். இதிலிருந்து தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்பதால் அது மக்களுக்கு வேகவேகமாக செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் மூன்றாவது அலை உச்சத்தை அடையக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துவரும் இதே நேரத்தில், 

கொரோனா, எபோலா போன்றே ஆபத்து நிறைந்த வைரஸான மார்பக் மேற்கு ஆப்பிரிக்காவில் பரவி வருவது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த வைரசால் உயிரிழந்த நோயாளியின் உடலை பரிசோதனை செய்ததில், இந்த வைரஸ் தாக்கும் பட்சத்தில் 80% உயிரிழப்பு நேர வாய்ப்பு இருப்பதாக  கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான தகவலை உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்க பிரதிநிதி மாத்ஷிடிசோ தெரிவித்துள்ளார். மேலும் இந்த வைரஸ் கொரோனா, எபோலா போன்றே விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியது என்றும், இந்த வைரசை  ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டுவரை தீவிரமாக பரவி வந்த எபோலா பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் மற்றொரு கொடிய வைரஸ் அங்கு பரவிவருவது இந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த புதியவகை வைரஸ், மேற்கு ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகி இருக்கிறது என்றும், ஆனால் இதன் பரவல் விகிதமும் குறைவு என்றும் WHO கூறியுள்ளது. பொதுவாக இந்த வைரஸ் குகைகள், சுரங்கங்கள் போன்ற பகுதிகளில் இருக்கும் வௌவால்களிலிருந்து பரவியிருக்க கூடும் என்றும், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவரின் வியர்வையில் இருந்து அது மற்றொருவருக்கு பரவும் ஆபத்து இருக்கிறது என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

 

click me!