தமிழக அரசின் கடன் தொகை... தன் குடும்பத்தின் சார்பாக ரூ.2,63,976 கடனை அடைக்க வந்த முதல் நபர்..!

By Thiraviaraj RMFirst Published Aug 10, 2021, 4:03 PM IST
Highlights

வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு ரூபாய் 15 லட்சம் குடும்ப கடனாகக் மீண்டும் கொடுத்து, குடும்பமாக சேர்ந்து சுய தொழில் செய்து தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும், தனி நபருடைய வருமானத்தையும் வறுமையையும், ஏழ்மையையும் போக்குவதற்கு மேற்கண்ட தொகையை கொடுத்து உதவிட வேண்டும்

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.2.63 லட்சம் கடன் சுமை உள்ளது என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளி அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இது தொடர்பாக மீம்ஸ்களும், கேலி கருத்துகளும் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டன. ஆனால், அருகே மேற்கு பாலப்பட்டியை சேர்ந்த காந்தியவாதியான இளைஞர் ரமேஷ் தியாகராஜன் என்பவர் தனது குடும்பத்திற்கான பங்கான ரூ.2.63 லட்சம் கடன் தொகைக்குரிய வங்கிக் காசோலையை முதல் நபராக நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் கோட்டை குமாரிடம் இன்று நேரில் சந்தித்து வழங்க வந்தார். ஆனால், அந்த இளைஞர் வழங்கிய காசோலையை கோட்டாட்சியர் வாங்க மறுத்து விட்டார். மாவட்ட ஆட்சியரிடம் வாங்குமாறு கூறினார். 

அப்போது பேசிய அவர், ‘’ஒவ்வொருவரும் அந்த அந்த குடும்பத்திற்கான கடன் தொகையை கட்டுவதற்கு முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசின் கடனை முழுவதுமாக அடைக்க வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இது ஒரு முன்னோட்டமாக அமையும்.

அதேபோல் எனது குடும்பத்திற்கான கடனாக நிலுவையில் உள்ள பதிவேட்டின் நகலையும் தரவேண்டும். இந்தக் கடனை செலுத்த முன்வரும் வசதியற்ற, வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு ரூபாய் 15 லட்சம் குடும்ப கடனாகக் மீண்டும் கொடுத்து, குடும்பமாக சேர்ந்து சுய தொழில் செய்து தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும், தனி நபருடைய வருமானத்தையும் வறுமையையும், ஏழ்மையையும் போக்குவதற்கு மேற்கண்ட தொகையை கொடுத்து உதவிட வேண்டும்’’எனவும் கேட்டுக் கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் சென்று காசோலையை கொடுத்த போது அதனை வாங்க மாவட்ட ஆட்சியரும் மருத்து விட்டார். காந்தியவாதியான ரமேஷ் தியாகராஜனின் இந்த செயல் பரபரப்பாக பேசப்படுகிறது. 

click me!