இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா.... முதல்வர் பழனிசாமி புகழாரம்..!

By vinoth kumarFirst Published Jan 27, 2021, 12:50 PM IST
Highlights

ஜெயலலிதாவின் பாதையில், தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். 

ஜெயலலிதாவின் பாதையில், தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். 

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதன்பின்னர் அவர் பேசுகையில்;- எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை வழிநடத்தியவர் ஜெயலலிதா. எதிரிகளாலும் பாராட்டப்பட்டவர் ஜெயலலிதா. பெண்கள் பாதுகாப்புக்கு பல முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. 

முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமை பெற்றவர். முதல்வராக 15 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். தொடர்ந்து 2வது முறை ஆட்சியை பிடித்தவர். ஜெயலலிதாவின் பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது. இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடிக்க வித்திட்டவர் ஜெயலலிதா. இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் உலகளவில் பாராட்ட பெற்றதுடன், பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டன. பெண்களுக்கு பல்வேறு முன்னோடி திட்டங்களை தந்தவர். உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்தார்.பொது மக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தார். எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை நிறைவேற்றியவர்.

சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா. வரும் சட்டமன்ற தேர்தலில் பெருபான்மையான இடங்கில் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம். ஜெயலலிதா நினைவிடம் கட்டக்கூடாது என வழக்கு போட்டவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தந்தை கருணாநிதிக்கு நினைவிடம் கட்டுவதற்காக அந்த வழக்குகளை மு.க.ஸ்டாலின் வாபஸ் பெற்றார் என என முதல்வர் விமர்சனம் செய்துள்ளார். 

click me!