கரண்ட் கம்பியில் ஈரத்துணி காயப்போட்ட அரசு அலுவலர்.. ஸ்பாட் ஆவுட் .. பெற்றோர்கள் கதறல்.

By Ezhilarasan BabuFirst Published Jan 27, 2021, 12:06 PM IST
Highlights

நேற்று உறவினர் வீட்டு விழாவை முடித்துவிட்டு அங்கு தங்கியுள்ளார். இன்று அதிகாலையில் அதே ஊரில் உள்ள பம்பு செட்டுக்கு சென்று குளித்துள்ளார். குளித்து முடித்ததும் தனது துணிகளை அருகிலுள்ள கம்பியில் காய போட்டுள்ளார்.  

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் ஊரில் குளிக்கச் சென்ற அரசு அலுவலர் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளனார். தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் அருகே உள்ள பொடியனூரை சேர்ந்தவர் செல்வம், இவரது மகன் ராஜன் வயது 25. தற்போது திருநெல்வேலி அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது உறவினர் சித்தி வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு நேற்று ஆலங்குளம் அடுத்த மருதம்புத்தூர்க்கு சென்றிருந்தார். 

நேற்று உறவினர் வீட்டு விழாவை முடித்துவிட்டு அங்கு தங்கியுள்ளார். இன்று அதிகாலையில் அதே ஊரில் உள்ள பம்பு செட்டுக்கு சென்று குளித்துள்ளார். குளித்து முடித்ததும் தனது துணிகளை அருகிலுள்ள கம்பியில் காய போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஈரத்துணி என்பதால் அது அருகிலிருந்த மீட்டர் பெட்டிமீது பட்டதில் உடனே மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ராஜன் உயிருக்கு போராடியுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

 

ஆனால், ராஜனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலங்குளம் காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ராஜனின் உடல் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.அப்போது அவரின் உடலை கண்டு அவரின் பெற்றோர் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் கரையவைப்பதாக இருந்தது.
 

click me!