ஜெயலலிதாவாகிய நான்!: அரசியலை அடித்து துவைத்து அதகளம் செய்த ‘அம்மா’ தி மாஸ்...

 
Published : Dec 05, 2017, 09:35 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
ஜெயலலிதாவாகிய நான்!: அரசியலை அடித்து துவைத்து அதகளம் செய்த ‘அம்மா’ தி மாஸ்...

சுருக்கம்

Jayalalithaa is the iconic of political history

நின்று நிதானமாய் அடித்து ஆடும் டெஸ்ட் மேட்ச் அல்ல ஜெயலலிதாவின் வாழ்க்கை. உலககோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதிக்கொள்வது போல் நொடிக்கு நொடி பரபரப்பானது. எதைப்பற்றியும், எவனைப்பற்றியும் கவலைப்படாமல் தடாலடியாய் தரையிறங்கி தாறுமாறாக அடித்து ஆடிய ஆட்டக்காரர் அவர். ஆனால் அதில் பெரும்பாலானவை சிக்ஸரை தொட்டன! தேசிய அரசியலரங்கில் ‘வுமன் ஆஃப் தி மேட்ச்’ பட்டத்தை பல முறை வென்றவர். 
மழை குறுக்கிட்ட டி20 போல் மளமளவென துவங்கி மர்மமாக முடிந்த அவரது விறுவிறு வாழ்க்கையின் எக்ஸ்பிரஸ் பதிவு இது...

*    பிறந்த தேதி    -    24/02/1948
*    இயற்பெயர்    -    கோமளவள்ளி
*    அப்பா - ஜெயராம், அம்மா - வேதவள்ளி (சந்தியா)
*    உடன் பிறப்பு - ஜெயக்குமார் 
*    பிறந்த ஊர் - மேல்கோட்டை, மைசூரு
*    படித்தது  - பிஷப் காட்டன் கேர்ள்’ஸ் ஸ்கூல் ,     பெங்களூரு. சர்ச் பார்க், சென்னை
*    படிப்பில் பதக்கம் - பத்தாம் வகுப்பில்     மாநிலத்திலேயே முதலாவது இடம் பெற்று தங்கம். 
*    பிடித்தது -     சினிமா 

*    சினிமாவில் நுழைந்தது - 1960களில் 
*    நடித்த மொத்த படங்கள் - சுமார் 140
*    அதிகம் நடித்த மொழிகள் - தமிழ், தெலுங்கு,     கன்னடம்.
*    பேச தெரிந்த மொழிகள்- தமிழ், தெலுங்கு,     கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம்.
*    செல்லப்பிராணிகள் -     நாய்கள்.  (ஜூலி மற்றும்     ஸ்பிட்ஸ் இரண்டும் மிக செல்லங்கள்)
*    சினிமா துறையில் வாங்கிய பட்டம் ‘தமிழ்     சினிமாவின் அரசி’.
*    அரசியலில் நுழைந்த வருடம் - 1982

*    அரசியலில் கிடைத்த முதல் உயர்வு:         அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர்     பதவி.( அதுவும் குறுகிய காலத்தில் கிடைத்தது)
*    முதல் அரசு பதவி    -    ராஜ்யசபா எம்.பி. (1984)
*    அ.தி.மு.க.வின் தலைவியானது - 1987ல்,     எம்.ஜி.ஆர். இறப்புக்குப் பின்.
*    எதிர்கட்சி தலைவியானது - 1989ல்
*    முதல்வரானது    -    1991.

*    ஜெயலலிதாவின் பெயர் சொல்லும் திட்டம் -     அநாதை குழந்தைகளை காக்க வந்த தொட்டில்     குழந்தை திட்டம். (அப்போ ஆரம்பிக்கப்பட்ட         இதற்கும், இப்போ வந்திருக்கும் அம்ருதாவுக்கும்     தொடர்பு இருக்குமோன்னு நினைக்காதீங்க)
*    வளர்ப்பு மகன் திருமணம்    -    1995
*    பெரும் தோல்வி    -    1996 பொது தேர்தல்
*    முதல்வர் பதவியிலிருந்து தகுதி நீக்கம்     செய்யப்பட்டது    -    2001
*    பன்னீரை முதன் முதலாய் முதல்வராக்கியது -    அதே வருடம்.
*    மூன்றாவது முறை முதல்வரானது - 2011
*    சசி டீமை தூக்கி வீசியது (சில காலத்துக்கு மட்டும்)     -     2011 டிசம்பர் 19
*    சாதனை திட்டங்கள்:    அம்மா உணவகம், மழை நீர்     சேகரிப்பு திட்டம், மடிக்கணிணி திட்டம்,     பாலூட்டும் தாய்மார் அறைகள்.

*    பரப்பன அக்ரஹார சிறை சென்றது - 2017     செப்டம்பர் 
*    மீண்டும் முதல்வரானது - 2015 மே
*    ஆறாவது முறை முதல்வரானது - 2016 பொது     தேர்தலில்
*    உடல் சுகவீனமாகி அப்பல்லோவில்     சேர்க்கப்பட்டது -     செப்டம்பர் 22, 2016
*    ஜெயலலிதாவின் இறப்பு அறிவிக்கப்பட்டது -     2016 - டிசம்பர் 5.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!