ஜெயலலிதா இருந்தப்ப தீவிரமா ஆலோசனை பண்ணிட்டுதான் அமைச்சர்களை தூக்கியடிப்பாராம்: சொல்வது வேறு யாரு? அதே செல்லூரார்தான்.

By Vishnu PriyaFirst Published Nov 5, 2019, 6:26 PM IST
Highlights

எடப்பாடியாரின் கேபினெட்டை ‘காமெடி கேபினெட்’ என்று மீம்ஸ்களி மட்டையடி அடித்துக் கொண்டே இருக்கின்றனர். இதற்கு மறுப்பேதும் சொல்ல முடியாதபடிதான் அமைச்சரவையின் பேச்சுவார்த்தைகளும் இருக்கின்றன. அந்த வகையில் இப்போது செல்லூர் ராஜூ சொல்லியிருக்கும் விவகாரம், அவனவனை சிரிச்சே சின்னாபின்னாமாக வைத்திருக்கிறது. அப்படி இன்னா சொன்னார் செல்லூரார்?........

செல்லூர் ராஜூவுக்கு அறிமுகம் தேவையில்லை. அரையடி தெர்மகோலை எடுத்து கவனித்தால், அண்ணனின் சகல ஜாதக பாதகங்களும் கூகுளின் சர்ச் இயந்திரம் அள்ளிக் கொட்டுவது போல் குபுகுபுன்னு வந்து விழும். வைகை அணையில் இவர் நடத்திய புரட்சி பத்தாதுன்னுட்டு, அந்த யோசனைக்காக தன்னை ஐ.நா. சபை வரைக்கும் புகழ்ந்தாய்ங்க!ன்னு சொல்லாத அளவுக்கு அவர் பேசுன பேச்சுதான் எக்ஸ்ட்ரா ஹைலைட்டு. கடந்த சில மாதங்களாக அண்ணன் செல்லூராரை ராஜேந்திரபாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் ஓவர் டேக் செய்த நிலையில் இன்றோ ஒரே பேட்டியின் மூலம் மீண்டும் டிரெண்டிங் ஆகியிருக்கிறார் செல்லூரார். அப்படி என்ன சொன்னார் தெரியுமா?....

“நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. 
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அமைச்சரவை மாற்றம் தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தித்தான் முடிவெடுப்பார். அதேபோல் முதல்வரும் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கிறேன்.” என்று கூறியுள்ளார். 

ஜெயலலிதா ஆலோசனை செய்து, அதுவும் தீவிரமாக செய்துவிட்டுதான் அமைச்சர்களை பதவியிலிருந்தூ தூக்கி எறிவார்! என்று என்னதான் செல்லூரார் இப்படி கூறியது காமெடியாக எடுக்கப்பட்டாலும் கூட ‘அதேபோல் எடப்பாடியாரும் ஆலோசனை செய்வார் என எதிர்பார்க்கிறேன்’ என்று அவர் இ.பி.எஸ்.ஸை ஒரு சிக்கலில் இழுத்துவிட்டிருப்பது போல் தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

click me!