ஜெ. மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடலாம் !! வீடியோ ஆதாரம் தர ரெடி…திவாகரன் மகன் ஜெயானந்த் அதிரடி.!!!

Asianet News Tamil  
Published : Aug 16, 2017, 07:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
ஜெ. மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடலாம் !! வீடியோ ஆதாரம் தர ரெடி…திவாகரன் மகன் ஜெயானந்த் அதிரடி.!!!

சுருக்கம்

Jayalalitha viedio in appalo hospital wil be published

ஜெயலலிதா மரணத்தில் எந்தவிதமாக மர்மமும் இல்லை என்றும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டால், வீடியோ ஆதாரங்களை தரத் தயார் என்றும் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை யாருமே சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஜெயலலிதாவின் அருகே இருந்த சசிகலா மற்றும் டாக்டர்கள் தவிர யாருமே அவரை பார்க்க யாருமே அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார்.

ஆனால் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி ஓபிஎஸ் உள்ளிட்டோர் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மேலூர் பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரனின் மகன் ஜெயானந்த், ஜெயலலிதா மரணத்தில் எந்தவிதமாக மர்மமும் இல்லை என்றும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டால், வீடியோ ஆதாரங்களை தரத் தயார் என தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மருத்துமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை நீதிபதி முன்பு சமர்ப்பிக்க தயாராக உள்ளதாகவும் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!