பாமக அறிக்கைகளை கமல் படிக்க வேண்டும் – ராமதாஸ் பதிலடி…

Asianet News Tamil  
Published : Aug 15, 2017, 10:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
பாமக அறிக்கைகளை கமல் படிக்க வேண்டும் – ராமதாஸ் பதிலடி…

சுருக்கம்

Ramadoss has made it clear that he should study the mouthpiece of Kamal Hassans opinion that the opposition does not voice against the Tamil Nadu government.

தமிழக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் குரல் கொடுப்பதில்லை என்ற கமலஹாசனின் கருத்துக்கு பாமக அறிக்கைகளை அவர் படிக்க வேண்டும் என ராமதாஸ் டிவிட் செய்துள்ளார்.

தமிழகத்தில் ஊழல் அதிகரித்திருப்பதாகவும், சிஸ்டம் சரியில்லை எனவும் கமலஹாசன் அன்மை காலங்களில் விமர்சித்து வந்தார்.

அதன்படி தற்போது 3 டுவிர்களை பதிவு செய்துள்ளார். அதில், எனது குரலுக்கு வலு சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது எனவும், தமிழ்நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே எமது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு மாநிலத்தில் ஊழல், துயர சம்பவங்கள் நடந்தால் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், ஊழலில் இருந்து நாம் இன்னும் சுதந்திரம் பெறாத நிலையில் நாம் இன்னும் அடிமைகளே எனவும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஊழல் முதல்வர் பதவி விலகும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தவில்லையா?   கண்களை மூடிக்கொள்ளாமல் பாமக அறிக்கைகளை படிக்க வேண்டும்! இவ்வாறு கமல் டிவிட்டரை டேக் செய்து கருத்து கூறியுள்ளார் ராமதாஸ்.

 

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!