
தமிழகத்தில் இரண்டு கைது சம்பவங்களை பொதுமக்கள் பெரிதாக பேசுவார்கள். ஒன்று 1996 ல் ஜெயலலிதாவை அப்போதைய திமுக அரசு கைது செய்த சம்பவம் , அடுத்தது 2001 ல் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தையும் கூறுவார்கள்.
1996 ல் அதிமுக படுதோல்வி அடைந்தது. நாடெங்கும் அதிமுகவை வெறுத்து ஒதுக்கினர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஜெயலலிதாவை தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
அப்போதுதான் திமுக தலைவர் முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஜெயலலிதாவை கைது செய்ய உத்தரவிட்டார். அப்போது ஜெயலலிதாவை கைது செய்து அழைத்து செல்வதற்காக வேறொரு காவல் நிலையத்திலிருந்த ஆய்வாளர் சரஸ்வதி என்பவரை சிறப்பாக ஒதுக்கி இருந்தனர். அந்த ஆய்வாளருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
அவரும் தனது சக காவலர்களுடன் முன்னாள் முதல்வர், ஒரு கட்சியின் தலைவியை கைது செய்ய போகிறோம், அரசாங்கத்தின் மீதுள்ள கோபத்தை நம்மீது காட்டுவாரோ என்று பதற்றத்துடனும் தயக்கத்துடனும் சென்றுள்ளார்.
ஆனால் அங்கு நடந்ததே வேறு. முதல்வராக இருந்தவர் , காவல்துறையை கையில் வைத்திருந்தவர் , டிஜிபிக்களே காத்திருக்கும் நிலையில் இருந்த ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்துக்கு சென்றார் , தயங்கி தயங்கி வந்த விஷயத்தை சொல்லி அனுப்பினார்.
ஜெயலலிதா முன்பு கொண்டு நிறுத்தப்பட்டார். ஜெயலலிதாவிடம் அவரை கைது செய்ய வந்த விஷயத்தை கூறி அதற்கான ஆர்டரை கொடுத்தார். விஷயத்தை கேடுகொண்ட ஜெயலலிதா ஒரு பத்து நிமிடம் காத்திருக்க முடியுமா நான் தயாராகிவிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆய்வாளர் சரஸ்வதியும் சரி மேடம் என்று கூறியுள்ளார். சரி இங்கு அமருங்கள் என்று கூறிய ஜெயலலிதா தனது பணிப்பெண்ணை அழைத்து அவர்களுக்கு டீ கொடு என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
வந்த இடத்தில் டீ குடிக்க கூடாது என்றாலும் சொன்னவர் முக்கியமான நபர் என்பதால் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தட்டவில்லை. பின்னர் சொன்னபடி பத்து நிமிடத்தில் வந்த ஜெயலலிதா போகலாமா என்று கேட்க அவரை அழைக்க வந்த ஜிப்சி ஜீப்பின் பின்புறம் அமர்ந்து நீதிபதியிடம் அழைத்து செல்லப்பட்டார். அதன் பின்னர் 28 நாட்கள் சிறையில் இருந்தார்.
மறுபுறம் 2001 ஆம் ஆண்டு நள்ளிரவில் திமுக தலைவரை கைது செய்ய போலீசார் சென்ற போது அவரை கைது செய்ய விடாமல் இடையூறாக இருக்க பெரிய களேபரமே நடந்தது. அதன் பின்னரும் மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர் பாலு போன்றோர் சிபிசிஐடி அலுவலக கதவை உடைத்ததையும் பொதுமக்கள் கண்கூடாக பார்த்தார்கள்.
கைது நடவடிக்கையின் போது திமுக தலைவரை தரதரவென்று இழுத்து செல்லும் நிலை போலீசார் அராஜகமாக நடந்து கொண்டதாக கூறப்பட்டாலும், கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற அடிப்படை விஷயத்தை மீறலாமா? என்ற விமர்சனமும் அப்போது மற்ற கட்சிகளால் வைக்கப்பட்டது.
கைது என்றாலும், பதவி ஏற்பு என்றாலும் அனைத்திலும் ஒரு ஒழுங்கு முறையுடன் ஜெயலலிதா நடந்து கொண்டார். இதற்கு காரணம் அவரது உள்ள உறுதி ஆகும் , அதனால் தான் அவரை இரும்பு மனுஷி என்று அழைக்கின்றனர்.