சிங்கமாய் கர்ஜித்த ஜெயலலிதா-அரண்டுபோன அமைச்சர்கள் - அழுது புலம்பிய தொண்டர்கள்

 
Published : Dec 09, 2016, 03:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
சிங்கமாய் கர்ஜித்த ஜெயலலிதா-அரண்டுபோன அமைச்சர்கள் - அழுது புலம்பிய தொண்டர்கள்

சுருக்கம்

ஜெயலலிதா என்றாலே அதிரடி , அஞ்சாமை, எதிலும் ஒரு ஒழுக்கம் என பெயர் பெற்றவர். கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி ஜெயலலிதா என்றாலே ஒரு முத்திரை பதிப்பார். 

அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை முதல்வர் ஜெயலலிதா முன்பு அடங்கி ஒடுங்கி வேலை செய்ததை தான் தமிழகம் கண்டுள்ளது. காலையில் அமைச்சராக வீட்டிலிருந்து கிளம்பும் நபர் மாலையில் பதவி இருக்குமோ என பயந்த காலம் உண்டு. 

மாற்றுக்கட்சி ஆட்களுடன் குறிப்பாக திமுகவினருடன் உறவு வைத்திருந்ததை பற்றி அறிந்தாலே அவர் கதி அதோ கதிதான் என்ற நிலை கட்சிக்காரர்களை ராணுவ கட்டுப்பாட்டுடன் கட்சியில் இருக்க வைத்தது. 

முதல்வர் கோட்டையில் இருந்தால் கூட குமரியில் இருக்கும் கட்சிக்காரன் ஒழுங்காக இருப்பான். அந்த அளவுக்கு ராணுவகட்டுப்பாட்டுடன் கட்சியை நடத்தினார் முதல்வர். 

ஆனாலும் முதல்வரையே கடுமையாக எரிச்சலும் கோபமும் அடைய வைக்கும் நிகழ்வும் நடந்தது. அதுதான் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் நடந்த சம்பவங்கள். 

அதிமுக தேர்தல் நேரத்தில் கட்சிக்குள்ளேயே விரும்பதகாத கோஷ்டி மோதல்கள் தலை தூக்கியது. கட்சி வேட்பாளரையே தோற்கடிக்க முயன்ற சம்பவங்கள் நடந்தது. கரூர் வேட்பாளரை தோற்கடிக்க நடந்த சம்பவங்கள் நடந்தது. ஐ.பெரிய சாமியும் நத்தம் விஸ்வநாதனும் கைகோர்த்த விவகாரம் உளவுத்துறை மூலம் முதல்வர் காதுக்கு வந்தது.

அனைத்தையும் பொறுமையாக சகித்து தேர்தலில் உடல் நலம் சரி இல்லாத போதும் சூறாவளியாக  சுற்றி  தமிழகத்தில் ஆட்சியை தொடர்ந்து இரண்டாவது முறையும் தக்க வைத்தார். அதன் பின்னர் கூடிய செயற்குழுவில் எதுவும் பேசாத முதல்வர் பின்னர் கூடிய  பொதுக்குழுவில் வெடித்தார் . 

சிம்மமாய் கர்ஜித்தார், அமைச்சர்கள் முதல் அனைவரும் ஆடிப்போனார்கள். கட்சியில் அவரவர் செய்யும் துரோகத்தை புட்டு புட்டு வைத்தார். சில அமைச்சர்கள் பெயரை குறிப்பிட்டு வாங்கு வாங்கு என வாங்கினார்.

முக்கியமாக நத்தம் விஸ்வநாதன் ஐபெரியசாமி கூட்டையும், கரூர் எம்.எல்.ஏவை தோற்கடிக்க நடந்த முயற்சியையும் குறிப்பிட்டு கடுமையாக பேசினார். ஒரு மணி நேரன்ம் கடுமையான மழை பெய்தது போல் ஜெயலலிதாவின் பேச்சும் மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல் கட்சி நிர்வாகிகள் அமைச்சர்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் பார்த்தனர். 

துரோகத்தனத்தை தாங்கி கொண்டு இந்த வெற்றியை பெற்றுள்ளேன், எனக்கு குடும்பமோ , சொந்தமோ இல்லை. நான் எதற்கு இந்த ஏச்சையும் பேச்சையும் , அவச்சொல்களையும் தாங்கணும் எனக்கு என்ன அவசியம் . நீங்கள் துரோகம் செய்வீர்கள் நான் அதையும் தாண்டி கட்சியை கொண்டு செல்ல வேண்டுமா என்று கேட்டார் ஜெயலலிதா. 

இதைகேட்ட பொதுக்குழு உறுப்பினர் பொங்கி எழுந்தனர். அம்மா அவர்களை அடையாளம் காட்டுங்கம்மா என்று உருகி அழுதனர். அம்மா நாங்கள் இருக்கிறோம் என்று அரற்றினர். கடைசியாக நடந்த பொதுக்குழு கூட்டம் தான் அது. 

அடுத்த கூட்டம் நடப்பதற்குள் அவர் கட்சியை வழி நடத்த இல்லை.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!
அன்புமணிக்கு பாமகவில் ஒரு துளியும் உரிமை இல்லை..! நோட்டீஸ் விட்ட ராமதாஸ்..!