
முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதையடுத்து தமிழகத்தின புதிய முதலமைச்சராக ஓபிஎஸ் பதவியேற்றுக் கொண்டார். யார் முதலமைச்சர் என்ற போட்டியில் எடப்பாடியை பின்னுக்கு தள்ளி ஓபிஎஸ் முதலமைச்சரானார்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் முதலமைச்சர் என கருதப்படும் ஓபிஎஸ் சின் செயல்பாடுகள் குறித்து பொது மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.ஓபிஎஸ் உட்பட 31 அமைச்சர்கள் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்,
இந்நிலையில் தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,