ஒரு தவறு செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன் - ஜெயேந்திரர் முதல் அக்ரி வரை

 
Published : Dec 09, 2016, 04:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
ஒரு தவறு செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன் - ஜெயேந்திரர் முதல் அக்ரி வரை

சுருக்கம்

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக , எம்ஜிஆரால் வளர்த்தெடுக்கப்பட்டவர் ஜெயலலிதா. எம்ஜிஆர் என்றால் நேர்மையானவர், ஏழைகளின்  இதயத்தில் வாழ்பவர் என்ற எண்ணம் எல்லோருக்கும் உண்டு.

ஆனால் எம்ஜிஆர் கூட கட்சியில் உறுதியான நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு அவருடைய காலகட்டத்தில் கட்சி இருந்தது. எம்ஜிஆர் சாதாரணமக்களை நேசித்தார் என்றலும் அவரது உறுதியான நடவடிக்கை கட்சிக்குள் இல்லை. 

ஆனால் ஜெயலலிதா சாதாரண மக்களை நேசித்தார் என்றாலும் கட்சிக்குள் அவரது பிடி ராணுவ தளபதிக்கு ஒப்பானது. அதே போல் சட்டம் ஒழுங்கு , தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் ஜெயலலிதாவை எந்த தலைவருடனும் ஒப்பிட முடியாது. 

இதில் மற்றொரு அம்சம் என்னவென்றால் நடவடிக்கை எடுக்கப்பட்டவர் மீண்டும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புவார். அப்படி வாய்ப்பும் கிடைத்துள்ளது. 

ஆட்சியில் ஜெயலலிதா கண்டிப்புக்கு பெயர் போனவர் என்பதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். காவல் துறையும் சட்டம் ஒழுங்கும் 91 ஆம் ஆண்டு முதல் 96 வரை சரி இல்லை என்ற எண்ணம் பொதுமக்களிடையே பரவியதால் 96 ல் ஆட்சியை இழந்தார் ஜெயலலிதா.

ஆனால் அடுத்து வந்த ஐந்து ஆண்டுகள் அவரை மிகவும் பக்குவப்படுத்தின. திமுகவினர் அந்த ஐந்து ஆண்டுகளில் பொதுமக்களின் கடுமையான கோபத்துக்கு ஆளாகினர். அந்த நேரத்தில் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்குக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என முடிவெடுத்தார். 

அதன் விளைவு அவரது அந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் சட்டம் ஒழுங்குக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார் ஜெயலலிதா. எம்ஜிஆர் எங்கள் வீட்டுப்பிள்ளை படத்தில் நான் ஆணையிட்டால் என்ற பாடலை பாடுவார் அதில் ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று பாடியிருப்பார்.

வைர வரிகளான அந்த பாடல் வரிகளை நடைமுறைப்படுத்தி காட்டியவர் ஜெயலலிதா. சட்டம் ஒழுங்கை பேணுவதில் கொஞ்சமும் அவர் யாரிடமும் கருணை காட்டியதில்லை.  அதற்கு உதாரணம் ஜெயேந்திரர் கைது விவகாரத்தை சொல்லலாம். 

2001 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் கடுமையாக ரவுடிகளை ஒழித்தார். 2003 ஆ ஆண்டு பிரபல ரவுடி அயோத்திகுப்பம் வீரமணி என் கவுண்டரில் கொல்லப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டு செப்.3 ஆம் நாள்   காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டார். 

இதில் கொலையை விசாரித்தக் காவல்துறையினர் இதனை நிகழ்த்திய அப்பு என்பவரையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்து அவர்களுக்கு பணம் கொடுத்ததாக இரவி சுப்பிரமணியம் என்பவரையும் கைது செய்தனர். 

 

இந்த கொலை வழக்கில் தூண்டுகோளாக இருந்தார் என்பதற்காக தான் பெரிதும் மதிக்கிற வாழும் தெய்வமாக தன் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடுகிற இடத்தில் இருந்த ஜெயேந்திரரையும், விஜயேந்திரரையும் கைது செய்ய உத்தரவிட்ட உறுதியான இதயம் கொண்டவர் ஜெயலலிதா. 

விசாரணை அதிகாரி பிரேம்குமாரே எதிர் பார்க்காத நிக்ழவு அது. எல்லோரையும் கைது செய்துவிட்டோம் ஒரே ஒருவரை மட்டுமே கைது செய்ய வேண்டும். அந்த ஒருவரை முதலமைச்சர் தெய்வமாக கும்பிடுகிறார். சில வாரங்களுக்கு முன்னர் கூட அவருடைய இடத்திற்கு சென்று காலடியில் அமர்ந்து ஆசி பெற்று வந்தார். இதை எப்படி சொல்வது என்று யோசித்தாராம். 

விசாரணை அதிகாரியையும் சில உயர் அதிகாரிகளையுமழைத்த ஜெயலலிதா நடந்த சம்பவங்களை  கேட்டுகொண்டே வர ஒரே ஒருவர் இதில் கைது செய்யப்பட வேண்டும் என அதிகாரிகள் தயங்கி கொண்டே சொல்ல யாரவர் என்று முதல்வர் கேட்க ஜெயேந்திரர் பெயரை தயங்கி தயங்கி கூறியுள்ளனர்.

முதல்வர் அதிர்ச்சியடைவார் என்று நினைத்த அதிகாரிகள் தான் அதிர்ச்சி அடைந்தனர். எந்த ரியாக்‌ஷனையும் முகத்தில் காட்டாமல் சாட்சிகள் , ஆதாரங்கள் வலுவாக இருந்தால் , அவருக்கு சம்பந்தமிருந்தால் தாராளமாக கைது செய்யுங்கள் என அனுமதி அளித்தார். 

ஜெயேந்திரர் , விஜயேந்திரர் கைதை நாடே ஆச்சர்யமாக பார்த்தது. பல பெரிய மனிதர்கள் கோர்ட் வாசலில் கிடந்தனர். பெரிய ஆங்கில பத்திரிக்கையின் ஆசிரியர் நீதிமன்றத்திற்கு ஓடினார். தெய்வத்தை கைது செய்தார் என்று ஜெயலலிதாவை தூற்றினர். ஆனால் அவர் அஞ்சவே இல்லை. அதுதான் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் சமூகத்தை வைத்து அவரை கிண்டல் செய்தவர்கள் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை வாயடைக்க வைத்தது. ஆனால் திமுக ஆட்சியில் பல சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி ஜெயேந்திரர் விடுதலையானார். 

இதே போல் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்ரி கிருஷ்ண மூர்த்தி , குமாரசாமி தற்கொலை வழக்கில் சிக்கிய போது உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டார். சாதாரண அரை டிராயர் போட்டு காதலியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த ரமணா அமைச்சர் பதவி , மாவட்ட செயலாளர் பதவி பிடுங்கப்பட்டது. 

இதே போன்று செங்கோட்டையன், செந்தமிழன் என பலரும் நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களே. ஆனால் தேர்தல் நேரத்தில் வீடியோ காட்சிகளுடன் ஆபாச பட ரேஞ்சுக்கு சிக்கிய பெரிய கருப்பனை அதன் பிறகு தான் அதன் பொருளாளர் தேர்தலில் ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

 ஒரு தவறு செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன் என உயர்ந்து நின்ற ஜெயலலிதாவின் உறுதியான இரும்பு உள்ளத்தின் காரணமாக இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படுகிறார். 

இனி ஒரு தலைவர் இது போன்ற உள்ள உறுதி கொண்டவராக வருவாரா என்பது சாத்தியமில்லாத ஒன்று தான்.

PREV
click me!

Recommended Stories

அன்புமணிக்கு பாமகவில் ஒரு துளியும் உரிமை இல்லை..! நோட்டீஸ் விட்ட ராமதாஸ்..!
கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!