ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான்! ஜெ. உறவினர் பரபரப்பு பேட்டி!

First Published Nov 28, 2017, 4:08 PM IST
Highlights
jayalalitha gave birth to girl baby in 1980


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை என்றும் ஜெயலலிதாவின் மகள் அம்ருதாவா என்பது தமக்கு உறுதயாக தெரியாது என்றும் ஜெ.வின் அத்தை மகள் லலிதா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சுளா (எ) அம்ருதா உச்சநிதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தான், ஜெயலலிதாவின் மகள்
என்றும், இதனை நிரூபிப்பதற்கு எனக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்து, டிஎன்ஏ சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ள மஞ்சுளா, ஜெயலலிதாவின் உடலுக்கு வைஷ்ணவ ஐயங்கார் முறைப்படி இறுதிச்சடங்கு நடத்தப்படவில்லை என்பதால் வைஷ்ணவ ஐயங்கார் முறைப்படி அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அம்ருதா தனது மனுவில் கூறியிருந்தார்.

மேலும் அந்த மனுவில் 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி ஜெயலலிதாவின் மகளாக பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தை ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதற்காக இந்த உண்மை வெளிப்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார். எனது வளர்ப்பு தாயான ஜெயலலிதாவின் சகோதரி ஷைலஜா 2015 ஆம் ஆண்டு இறந்து விட்டார். வளர்ப்பு தந்தையான சாரதி இந்த ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இறந்து விட்டார். இவ்வாறு அம்ருதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் 

இந்த நிலையில் அம்ருதாவின் மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அம்ருதாவின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,
அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்தனர். பெங்களூரு நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தனியார்
தொலைக்காட்சிக்கு அம்ருதா பேட்டி அளித்தபோது, தன்னை மூடி மறைத்து எனது வளர்த்தார்கள் என்றும், ஜெயலலிதா தான் என்னுடைய அம்மா என்று
உறவினர்கள் கூறியதால், வழக்கு தொடர்ந்ததாகவும் கூறியிருந்தார். 

இந்த பரபரப்புக்கிடையே, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது என்று அவரின் அத்தை மகள் லலிதா கூறியுள்ளார். பெங்களூருவில் வசித்து வரும் லலிதாவிடம், தனியார் செய்தி சேனல் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது லலிதா இந்த பகீர் தகவலை வெளியிட்டார்.

சென்னை, மயிலாப்பூரில் வசித்து வந்தபோது, 1980 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்ததாக கூறினார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா காலமாகி விட்டதால், அவருக்கு எனது பெரியம்மாள் ஜெயலட்சுமி பிரசவம் பார்த்தார் என்று கூறினார். தனக்கு குழந்தை பிறந்தது குறித்து யாரிடமும் கூறக் கூடாது என்று ஜெயலலிதா சத்தியம் வாங்கியதாகவும் கூறினார்.

அதனால் இதுநாள் வரை இது குறித்து பேசவில்லை என்றும், தற்போது, பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி வருவது டி.என்.ஏ. பரிசோதனையின் மூலமே தெரியவரும் என்றார். மேலும், ஜெயலலிதாவின் மகள் அம்ருதாதான் என்பது தமக்கு உறுதியாக தெரியாது என்றும் லலிதா கூறினார்.

அமிருதா, ரஞ்சனி மூலமாக கடந்த 3 மாதங்களாகதான் தெரியும். என்னை அத்தை என்று கூப்பிடுகிறார். அமிருதா மனதில் தனது அம்மா ஜெயலலிதா என்று நினைக்கிறார். ஐயங்கார் முறைப்படிதான் ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு நடைபெற வேண்டும் என்று அமிருதா விரும்புகிறார். சொத்துக்காக அவர் ஆசைப்படுவதை போல தெரியவில்லை.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உறவினரான லலிதா, பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இவர் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் சகோதரி ஜெய்சிகாவின் மகள் லலிதா என்றும் கூறினார்.

click me!