
அதிமுகவின் அவை தலைவரே ஒ.பி.எஸ்.ஸுடன் ஐக்கியமாகி விட்டார்.
மதுசூதனன், எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான மதுசூதனனை அதிமுகவின் அவை தலைவராக வைத்து ஜெயலிலிதா கவுரவம் அளித்து வந்தார்.
நாயுடு சமூகத்தை சேர்ந்த மதுசூதனனுக்கு, தமிழகம் முழுவதும் பல நிர்வாகிகளிடம் நல்ல செல்வாக்கு உள்ளது. தற்போது, சென்னையை சேர்ந்த 2 எம்எல்ஏக்களும், மதசூதனன் பாக்கெட்டில் உள்ளனர்.
நேற்று கூட எம்எல்ஏக்கள் மீட்டிங் நடத்தபோது, சசிகலாவுக்கு இணையாக அருகில் அமர்ந்தவர். அதிமுக எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டு இருந்த கோல்டன் பே ஓட்டலில்,, இவரையும் சிறை வைத்து விட்டனர் சசிகலா கோஷ்டியினர்.
சீனியரான தன்னை சிறை வைத்ததை, மதசூதனன் விரும்பவில்லை. மாறாக கொதித்து எழுந்துவிட்டார். கூவத்தூர் கோல்டன் பே ஓட்டலில் இருந்து, மதசூதனன், சசிகலா கோஷ்டியினரிடம் இதுந்து தப்பி வந்துள்ளார்.
நேராக ஓ.பி.எஸ். வீட்டுக்கு வந்த மதுசூதனன் தனது தார்மீக ஆதரவை தெரிவித்துள்ளார். மதுசூதனன் ஒ.பி.எஸ். கூடாரத்துக்கு வந்த உடனே தொண்டர்கள் மற்றும் நிந்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அப்போது பேசிய மதுசூதனன், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்ற குண்டை போட்டார். ஐ விட்னஸான, மதுசூதனன், இப்படி கூறி இருப்பதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என சசிகலவுக்கு உடன் இருந்தவரே, இப்படி கூறி இருப்பதால், சசிகலாவுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.