நானா மேய்க்கால் புறம்போக்கு..?? ஜெயக்குமார்தான் புரோக்கர்.. டார் டாரா கிழித்த புகழேந்தி..

By Ezhilarasan BabuFirst Published Jun 22, 2022, 8:48 PM IST
Highlights

தன்னை மேய்க்கால் புறம்போக்கு என விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை புரோக்கர் என கூறி பெங்களூரு புகழேந்தி பதிலடி கொடுத்துள்ளார். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது தான் தான்  Surety பிணையம் கொடுத்து அவரை வெளியில் கொண்டு வந்ததாகவும் புகழேந்தி கூறியுள்ளார்.

தன்னை மேய்க்கால் புறம்போக்கு என விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை புரோக்கர் என கூறி பெங்களூரு புகழேந்தி பதிலடி கொடுத்துள்ளார். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது தான் தான்  Surety பிணையம் கொடுத்து அவரை வெளியில் கொண்டு வந்ததாகவும் புகழேந்தி கூறியுள்ளார். அப்போதெல்லாம் இந்த புகழேந்தியை ஜெயக்குமாருக்கு யாரு என்று தெரியாத என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற முழக்கம் வலுவடைந்துள்ளது. இந்நிலையில் நாளை பொதுக்குழு நடைபெற உள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமையாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பொதுக்குழுவை ரத்து செய்ய வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெற்றே தீரும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் உறுதியாக இருந்து வருகின்றனர்.எனவே நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ள வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் ஒரு கடிதம் எழுதி உள்ளார். ஆனால் பன்னீர்செல்வம் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்வாரா இல்லையா என்பது தற்போதுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.

இது குறித்து இன்று மாலைக்குள் முடிவை அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். ஆனால் இதுவரை அவரது முடிவு என்ன என்பது தெரியவில்லை, இது ஒருபுறம் உள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கலவரம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், எனவே அந்த பொதுக்குழுவுக்கு தமிழக காவல்துறை அனுமதிக்கக் கூடாது எனவும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபுவிடம் மனு கொடுத்திருந்தார். இது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில் அவர் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன், அதிமுகவுக்கு தலைமையேற்கும் ஒரே தகுதி ஓபிஎஸ்-க்கு மட்டுமே உள்ளது எனக் கூறினார். அவரின் இந்த கருத்துக்கு பதில் தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தியுடன் ஓ.பன்னீர்செல்வம் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருடன் ஓபிஎஸ் சந்திக்கலாமா? ஓபிஎஸ்சுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா என கேள்வி எழுப்பியதுடன், பெங்களூரு புகழேந்தி ஒரு மேய்க்கால் புறம்போக்கு என தாக்கினார்.அவரின் இந்த பேச்சு சர்ச்சையாக மாறியுள்ளது,

இந்நிலையில் ஜெயக்குமாரின் விமர்சனத்துக்கு பெங்களூரு புகழேந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த அவர், என்னை பற்றி ஜெயக்குமார் அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டியுள்ளார். மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்தபோது அவருக்கு பிணை கொடுத்தது நான் தான், எத்தனையோ பேர் கோடிக்கணக்கில் சொத்து வைத்திருந்தும் இந்த புகழேந்திரான் பிணை கெடுத்தேன், அந்த நேரத்தில் அவர் விடுதலையாக காரணமாக இருந்தேன், அப்போதெல்லாம் என்னை யார் என்று தெரியவில்லையா? எனக் கூறியதுடன் ஜெயக்குமார்தான் ஒரு புரோக்கர் என பேசினார். மேலும் ஜெயக்குமாரை கடுமையான உதாரணங்களைக் மேற்கோல் காட்டி விமர்சித்தார். இதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 
 

click me!