"ஜிஎஸ்டி பெயரில் கொள்ளை லாபம் ஈட்டக்கூடாது" - ஜெயக்குமார் எச்சரிக்கை!!

Asianet News Tamil  
Published : Aug 06, 2017, 03:44 PM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
"ஜிஎஸ்டி பெயரில் கொள்ளை லாபம் ஈட்டக்கூடாது" - ஜெயக்குமார் எச்சரிக்கை!!

சுருக்கம்

jayakumar warning about gst

தமிழக அரசு சார்பில் 57 கோரிக்கைகள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும் நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சரக்கு மற்றும் சேவை வரி  அமல்படுத்தப்பட்ட பிறகு முதல்முறையாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட தமிழக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் இட்லி மாவு, கைத்தறி, விசைத்தறி பொருட்கள், 20 லிட்டர் கேன் குடிநீர், மீன்பிடி கயிறுகள், வலைகள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரியை முற்றிலுமாக விலக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 மேலும், ஜவுளி, பட்டாசு, தீப்பெட்டி, கடலை மிட்டாய், ஊறுகாய், சானி டரி நாப்கின் உள்ளிட்ட பொருட் களின் வரியைக் குறைக்க வேண் டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், தமிழக அரசு சார்பில் 57 கோரிக்கைகள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும்  தெரிவித்தார். 

ஜிஎஸ்டியை காரணம் காட்டி கொள்ளை லாபம் ஈட்டினால் சட்ட விரோத செயலாகும் எனவும், ஜிஎஸ்டி பெயரில் போலியாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் எச்சரித்தார். 

மேலும், வரி விலக்கு வரி குறைக்க வேண்டிய பொருட்கள் குறித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!