"டிடிவி தினகரன் பதவியே செல்லாது" - அடித்து கூறும் ஜெயகுமார்!

 
Published : Aug 06, 2017, 02:59 PM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
"டிடிவி தினகரன் பதவியே செல்லாது" - அடித்து கூறும் ஜெயகுமார்!

சுருக்கம்

ttv dinakaran has no post in admk says jayakumar

அதிமுக துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நியமனம் செய்தது செல்லாது எனவும் அவர் நியமித்த பதவிகளும் அப்படிதான் எனவும் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

பின்னர், சொத்துகுவிப்பு வழக்கில் அவர் சிறைக்கும் செல்லும்முன் அதுவரை அல்லாத புதிதாக துணை பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி அவரது அக்காள் மகனான டிடிவியை அமர்த்தி உத்தரவிட்டு சென்றார். 

ஆனால் இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி கைதானார். அதனால் எடப்பாடி தரப்பு அமைச்சரவை டிடிவியை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. அதற்கு டிடிவி முதலில் ஒப்புதல் தெரிவித்தார். 

இதைதொடர்ந்து சிறையில்  இருந்து ஜாமினில் வெளியே வந்த தினகரன் சசிகலாவின் ஆசியுடன், 60 நாட்கள்  பொறுப்பேன், பிரிந்த கட்சிகள் இணையாவிட்டால் மீண்டும் கட்சி பணி ஆற்றுவேன் என   தெரிவித்தார்.   

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயக்குமார் டிடிவிக்கு  எதிராக பல கருத்துக்களை தெரிவித்து வந்தார். 

இதையடுத்து 60 நாட்கள் நிறைவுற்ற நிலையில் புதிய அமைப்பு நிர்வாகிகளை டிடிவி நியமித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் ஜெயக்குமார், அதிமுக துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நியமனம் செய்தது செல்லாது எனவும் அவர் நியமித்த பதவிகளும் அப்படிதான் எனவும்  தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!