அதிமுகவினரை விமர்சிப்பதா.? எங்களை தொட்டவன் கெட்டான்..! அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்

By Ajmal Khan  |  First Published Aug 4, 2023, 2:25 PM IST

அதிமுகவினரை விமர்சிப்பதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநாட்டுக்குழு உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதிமுக மாநில மாநாடு ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக பங்கேற்க வேண்டுமென பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க, வரவேற்பு குழு, தீர்மானக்குழு, விளம்பரக்குழு என பல குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கு பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

அதிமுக மாநில மாநாட்டில் 15 லட்சம் பேர்

இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநாட்டுக்குழு உறுப்பினர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.  ஆலோசனை கூட்டத்துக்கு வந்த வந்த மாவட்ட செயலாளர்களுக்கு மாநாட்டின் விளம்பரக் குழு சார்பில், மாநாட்டின் பேட்ஜ், மாநாட்டு இலட்சிணையுடன் கூடிய துண்டு, மாநாட்டு லட்சினை ஸ்டிக்கர், நோட் பேட் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  அதிமுக மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் எனவும், நாடே கண்டிராத வகையில் மிகவும் எழுச்சிக்கரமாக மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். 

அதிமுகவை தொட்டவன் கெட்டான்

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை அரசியல் விஞ்ஞானி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவை தொட்டவன் கெட்டான் என அண்ணாமலைக்கு நன்றாக தெரிந்திருக்கும். அதிமுகவினரை விமர்சிப்பதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.மேலும் ராகுல் காந்தி வழக்கு தீர்ப்பு குறித்த கேள்விக்கு, நீதிமன்ற தீர்ப்பில் கருத்து கூற முடியாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என ஜெயக்குமார் பதிலளித்தார்.

இதையும் படியுங்கள்

அரசியல் விஞ்ஞானி செல்லூர் ராஜூக்கெல்லாம் பதில் சொல்லி என்னை தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை-அண்ணாமலை ஆவேசம்

click me!