பாஜக விற்கு திமுக தான் கொத்தடிமை. முன்னர் Goback Modi என்றவர்கள் இன்று Come come Modi என்கிறார்கள். ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் திமுக விற்கும் பாஜகவுக்கும் உண்டாகியுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளனர்.
அ.ராஜா சர்ச்சை பேச்சு- ஜெயக்குமார் கண்டனம்
சென்னை திரு வி க நகர் தொகுதியில் உள்ள குயப்பேட்டையில், எம்ஜிஆரின் 107 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்திற்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர் குறித்து ஆ.ராசா பேசியது வன்மையான கண்டனத்துக்கு உரியது. தரம் தாழ்ந்து விமர்சனம் தரம் தாழ்ந்தவருக்கு தான் வரும். 2ஜி அலைக்கற்றை ஊழலில் சிக்கி சிறைக்கு சென்ற ராசாவின் மூளையில் மரைகழண்டுவிட்டது.
கருணாநிதியின் குடும்ப கடனை அடைத்தவர் எம்.ஜி.ஆர், கருணாநிதி முதல்வராக காரணமானவர் எம்.ஜி.ஆர், அவர் இல்லை என்றால் கருணாநிதியே கிடையாது என கூறிய அவர், எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்ய ஆ.ராசாவுக்கு எந்த தகுதியும் இல்லை என கண்டனம் தெரிவித்தார்.கருணாநிதி குடும்பம் கடனில் தத்தளித்த போது எங்கள் தங்கம் திரைப்படத்தை இலவசமாக நடித்துக் கொடுத்து கருணாநிதி குடும்பத்தின் கடனை தீர்த்தவர் எம்ஜிஆர்.
என்ன பல்டி அடித்தாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை
டாஸ்மாக் விலை உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், முன்பு மறைமுகமாக குவாட்டர் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கியதாகவும் இனி அதிகாரப்பூர்வமாக வசூலிக்க உள்ளதாகவும், இந்த வருவாய் அரசு கருவூலத்துக்கு செல்கிறதா அல்லது சொந்த கருவூலத்துக்கு செல்கிறதா என்பதை பார்க்க வேண்டும் என கூறினார். அதிமு கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், தேர்தல் நெருங்கும் போது மாற்றங்கள் ஏற்படும். எங்களோடு பல கட்சிகள் பேசி வருகின்றன.
எந்தெந்த கட்சிகள் என்ற விவரத்தை இப்போது வெளியிட முடியாது. பாஜக என்ன பல்டி அடித்தாலும் இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை பொதுச்செயலாளர் அறிவித்துவிட்டார் அதிமுக எடுத்த முடிவில் இருந்து பின் வாங்காது. இனி எப்போது பஜாவுடன் கூட்டணி இல்லை. கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் தமிழகத்தில் பாலாறும் தேன் ஆறும் ஓடியதா ? மக்கள் மத்தியில் எடுத்து சொல்ல வேண்டியதை கட்டாயம் எடுத்து சொல்லுவோம்.
பாஜக அதிமுகவிற்கு சுமை
பாஜக தமிழகத்தில் வளர்ந்தது போல் அண்ணாமலை போலியான தோற்றத்தை காட்டிக் கொண்டிருக்கிறார். வடநாட்டில் பாஜக வளர்ந்துள்ளது ஆனால் தமிழகத்தில் எப்போதும் பாஜகவிற்கு வளர்ச்சி இல்லை. பாஜக ஒரு சுமை என்ற அடிப்படையில், மக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் விரும்பாத காரணத்தால் பாஜக இல்லாத கூட்டணியை அமைத்து வருகிறோம். தனித்து நின்ற வரலாறும் அதிமுகவுக்கு உண்டு. கூட்டணிக்கு வருபவரையும் அரவணைத்து தேர்தலை சந்திப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 2026 தேர்தலை நோக்கி செல்லும் போது அதற்கு முன்னோடியாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியையும் இலக்காக வைத்து வெற்றிபெறுவோம்.
இதையும் படியுங்கள்