அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது டாஸ்மாக் ஊழியர்களுக்கு இன்று தீபாவளியாக இருப்பதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியை நீக்கியவர் ஜெயலலிதா
செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், 2015 ஆண்டு தொடரப்பட்ட வழக்கு என மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். இந்த வழக்கின் காரணமாக 2015 ஆம் ஆண்டு அமைச்சர் அவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா என கூறினார். 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா கைது செய்யப்பட்டபோது அமைதியாக இருந்தனர்.ஆனால் தற்போது முதலமைச்சர், அமைச்சர்கள் மருத்துவதுவமனையை சுற்றி சுற்றி வருகின்றன்னர். ஏனென்றால் அவர்களுக்கு எதிராக செந்தில் பாலாஜி சென்று விடுவார் என்ற பயம் தான் காரணம் என தெரிவித்தார்.
undefined
ஆம்பளையா இருந்தா அழக்கூடாது
அதிமுக ஆட்சியில் தலைமைச்செயலகத்தில் வருமான வரி துறை சோதனை நடந்தபோது அப்போது திமுக தலைவராக இருந்த ஸ்டாலின் சட்டம் தன் கடமையை செய்துள்ளதாக கூறினார். ஆனால் இன்று மாறி பேசுகிறார். வெட்கம், மானம் இருந்தால் வழக்கை நேர்மையாக அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர் கொள்ள வேண்டும். ஆம்பளையா இருந்தா அழக்கூடாது , செந்தில் பாலாஜி ஒரு ஆம்பிளையா. கைது நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும். 30 ஆயிரம் கோடி ரூபாய் திமுக ஊழல் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜனே பேசியுள்ளார், அதிலும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பேசுகின்றனர். இதயத்தில் மூன்று அடைப்புகள் உள்ளதா ? 80 சதவீதம் இருந்தால் மட்டுமே பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெறும் 30 சதவீதம் அடைப்பு மட்டுமே உள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு இன்று தீபாவளி
இதற்கு பை பாஸ் அறுவை சிகிச்சையா என கேள்வி எழுப்பினார். இதில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது டாஸ்மாக் ஊழியர்களுக்கு இன்று தீபாவளியாக இருப்பதாக தெரிவித்தவர், தொலைஞ்சான்டா என பெருமை கொள்வதாகவும் கூறினார். ஐசியுவில் இருக்கும் செந்தில் பாலாஜி முதலமைச்சர் வரும் போது எப்படி எழுந்து உட்கார முடியும், இந்தாண்டு ஆஸ்கார் விருது கொடுத்தால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கலாம் என ஜெயக்குமார் கிண்டலாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
செந்தில் பாலாஜியின் உடல் நிலை தற்போது எப்படி உள்ளது.? ஓமந்தூரார் மருத்துவமனை பரபரப்பு தகவல்