3 முறை தடை செய்யப்பட்ட இயக்கம்.. வேண்டாவே வேண்டாம்.! அதுவும் காந்தி ஜெயந்தி அன்றா? ஜவாஹிருல்லா கோரிக்கை!

By Raghupati RFirst Published Sep 23, 2022, 8:59 PM IST
Highlights

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்குத் தடை விதிக்க தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் 9ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இந்த பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் 7 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. நாங்கள் சட்டத்தை மதிக்கக் கூடியவர்கள் என்றெல்லாம் தவறான வாதத்தை வைத்து அக்டோபர் 2 அன்று பேரணி நடத்த அனுமதியும் பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..எடப்பாடி, வேலுமணியை உருவாக்கியவர்..கொங்கு மண்டலத்தின் பவர் சென்டர் மறைவு - யார் இந்த ராவணன்!

இந்திய அரசியலில் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இவர்கள் ஒருபோதும் அரசியல் சட்டத்தை மதித்து நடந்ததே இல்லை என்பது கடந்த கால வரலாறு. இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நீதிமன்றம் இந்த பேரணிக்கு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அவரது பிறந்த நாளில் பேரணி செல்வது என்பது மாபெரும் வரலாற்றுப் பிழை.

தமிழகம் மிகப்பெரும் அமைதிப் பூங்காவாக இந்தியாவிற்கு சமூக நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாகத் திகழக்கூடிய மாநிலம். அந்த அமைதியைச் சீர்குலைக்கும் முயற்சியைத் தான் ஆர்.எஸ்.எஸ். இந்த பேரணி வாயிலாகச் செய்ய முயற்சி செய்கிறது. மதவெறி மற்றும் பிரித்தாளும் சூழ்ச்சி போன்றவற்றால் இந்தியத் திருநாட்டில் பல்வேறு வன்முறைகளை நிகழ்த்தியுள்ள ஆர்.எஸ்.எஸ்.

மேலும் செய்திகளுக்கு..தமிழகத்தில் 24 மணி நேரமும் மது,கஞ்சா கிடைக்கும்.. ஸ்டாலின் பிளான் இதுதான் - திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி

இயக்கத்திற்குத் தமிழகத்தில் பேரணி நடத்த அனுமதி வழங்கி இருப்பதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்றவர்கள் வாயிலாகக் கொள்கை ரீதியாகத் திராவிட இயக்க சிந்தனையில் எழுச்சியுடன் முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழகத்திற்குப் பாசிச சிந்தனை கொண்ட ஆர்.எஸ்.எஸின் இந்தப் பேரணி பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

தமிழகம் அமைதி பூங்கா தான் என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும் முற்போக்கு இயக்கங்கள் அனைவருக்கும் உள்ளதென்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..ஒரு நாளுக்கு 102 கோடி.! அதானி அண்ணண் சொத்து மதிப்பு இவ்வளவா? அடேங்கப்பா..! வாயைப்பிளக்கும் நெட்டிசன்கள் !

click me!