வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்ற விவகாரம்….மனிதநேய மக்கள் கட்சி தலைவருக்கு ஒரு வருஷம் ஜெயில்….

 
Published : Jun 20, 2017, 08:06 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்ற  விவகாரம்….மனிதநேய மக்கள் கட்சி தலைவருக்கு  ஒரு வருஷம் ஜெயில்….

சுருக்கம்

Jawahirulla will sent one year jail

விதிகளை மீறி வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்பட 5 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மாவட்ட 6-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசிடம் முறையாக அனுமதி பெறாத சங்கத்தின் மூலம் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2000 ஆவது ஆண்டு வரை வெளிநாடுகளில் இருந்து  1 கோடியே 54 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றதாக ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் மீது  புகார் எழுந்தது.

இது தொடர்பாக, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் ஹைதர் அலி உள்பட 5 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம், ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2011-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அனைவரும் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாவட்ட 6-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றதில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.தனசேகரன், விதிகளை மீறி வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்ற ஜவாஹிருல்லா உள்பட 5 பேர் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து, எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து ஜவாஹிருல்லா உள்ளிட்ட பேரின் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!