
குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக அறிவித்துள்ள வேட்பாளர் தலித் என்றபோதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மகிழ்ச்சியில்லை என அக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
சென்னையில் செய்தியாளக்ளுக்கு பேட்டி அளித்த திருமா, தலித்துகளைக் குறிவைத்து அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருக்கிறது என தெரிவித்தார்.
அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத்தான் குடியரசுத் தலைவர் பதவிக்கான பாஜக வேட்பாளர் அறிவிப்பு அமைந்திருக்கிறது என அவர் தெரிவித்தார்
.வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் ஆர்.எஸ்.எஸ். பின்னணி உடையவர் என்பதால், பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தாண்டி எந்தவொரு முடிவையும் அவர் எடுப்பது என்பது சந்தேகம்தான் எனவும் அவ் குற்றம்சாட்டினார்.
.ராம்நாத் போவிந்த் தலித் என்றபோதும் பாஜகவின் அறிவிப்பை வரவேற்கவோ அல்லது மகிழ்ச்சியடையவோ இயலாத நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளது என திருமாவளவன் கூறினார்.
.பாஜக தங்களது வேட்பாளரை அறிவிக்கும் முன்பே எதிர்கட்சிகள் வேட்பாளரை அறிவித்திருக்கவேண்டும் என்று கூறிய திருமாவளவன், ஆனால், வரும் 22-ஆம் தேதிதான இது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்போவதாக அறிவித்திருக்கின்றன என குற்றம்சாட்டினார்.
பாஜகவின் சதியை முறியடிக்கும் வகையில், எதிர்க்கட்சிகளின் அறிவிப்பு இருக்கவேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.