
உதவியாளரான ஜனாவின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதில் ரொம்பவே பதறிப் போயுள்ளார் டிடிவி தினகரன்.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் சசிகலா, தினகரன், திவாகரன், விவேக் ஜெயராமன் உள்ளிட்ட அனைவரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை இன்று அதிகாலையில் இருந்தே நடைபெற்று வருகிறது.
வருமான வரித்துறை சோதனை, வேறு சில நிறுவனங்கள் சார்ந்த இடங்களில் நடந்தாலும், பெரும்பாலும் ஜெயா தொலைக்காட்சி, மிடாஸ், ஜாஸ் சினிமாஸ் சார்ந்த, சசிகலா, தினகரன், திவாகரன் ஆதரவு உறவினர்கள், நண்பர்கள், கட்சி பிரமுகர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.
வருமான வரித்துறையினர் இன்று சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் சோதனை நடத்தினர். வீட்டின் முன்பு பசுமாட்டை நிறுத்தி இந்த பூஜையை தினகரன் நடத்தினார். கோ பூஜையின்போது பசு, கன்றுக்கு தினகரன் மற்றும் மனைவி அனுராதா ஆகியோர் வாழைப்பழங்களை அளித்தனர். கோபூஜையை மிக இயல்பாகவே தனது குடும்பத்தாருடன் டிடிவி தினகரன் நடத்தியுள்ளார்.
சசிகலா உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 187 இடங்களில் வருமான வரித்துறையின் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில், டிடிவி தினகரன் உதவியாளர் ஜனா உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தினகரன் குடும்பத்தில் ஐக்கியமான ஜனாவின் வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. ஜனாவின் மூலம்தான் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் சிறைக்கு செல்லவும் நேரிட்டது. தற்போது ஜனாவிடம் 3 பாஸ்வேர்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஜனாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதால் தினகரன் பதற்றமானார் என்றும் கூறப்படுகிறது. சென்னை, அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஜனா வீட்டுக்கெல்லாம் ரெய்டு போயிருக்காங்களே என்று பதறியதாக தெரிகிறது. தினகரனின் பதற்றத்தை பார்த்த மூத்த பத்திரிக்கையாளர்கள் சிலர் நமட்டு சிரிப்பை வெளிப்படுத்தினர்.