
போராட்டக்காரர்கள் குறித்து தொடர்ச்சியாக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சு.சாமி பொறுக்கிகள் என தன ட்விட்டர் அக்கௌண்டில் பதிவு செய்து வந்தார்.
அவருடைய இந்த கருத்துக்கு பல தரப்புகளில் இருந்து புகார்கள் வந்தது.
பாஜக தலைவர்களாலேயே பொறுத்து கொள்ள முடியாத அளவுக்கு திரும்ப திரும்ப எழுதி வந்தார் சு.சாமி.
சு.சாமியின் கருத்து உச்சகட்டத்தில் சென்று தமிழ்நாட்டு பொறுக்கிகள் என்மீது ஏன் வழக்கு தொடுக்க பயப்படுகிறீர்கள் என ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.
இதற்கு பல மட்டத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஏற்கெனவே தமிழர்களை பொறுக்கிகள் என சு.சாமி ட்விட்டரில் பதிவு செய்ததை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் சார்பில் தடா ரஹீம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
சு.சாமியின் ட்விட்டர் பக்கத்திலும் ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை கிண்டலடித்த சு.சாமி ஆங்கிலம் தெரியாத பொறுக்கிகள் கப்பல் தயாராக இருக்கிறது ஜாஃப்னாக்கு செல்ல என்றும் என் மீது ஏன் வழக்கு தொடுக்க பயப்படுகிறீர்கள் என்றும் கேட்டு பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து பொது அமைதிக்கும் போராடும் மாணவர்களை தூண்டிவிட்டு தமிழகத்தின் சட்ட ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் ட்விட்டரில் தொடர்ச்சியாக சு.சாமி பதிவு செய்கிறார்.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ராஜசேகர், தடா ரஹீம் உள்ளிட்டோர் மீண்டும் இன்று புகாரளிக்கின்றனர்.
இதுகுறித்து பேட்டியளித்த ராஜசேகர் கூறியதாவது,
சு.சாமியின் ட்விட்டர் வாசகங்கள் அமைதியாக போராடும் மாணவர்களை இளைஞர்களை வம்பிழுப்பதாக உள்ளது. இதனால் ஆத்திரமடையும் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்.
இதைதான் சு. சாமி எதிர்பார்க்கிறார். பொறுப்புள்ள எம்பியாக இருக்கும் சு.சாமி தொடர்ச்சியாக இதை செய்து வருவது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.
அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனரிடம் புகாரளிக்க உள்ளேன்.
நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தையும் நாட தயங்க மாட்டேன்.
சு.சாமியின் இது போன்ற செயளுக்கு அவரது ட்விட்டர் பக்க ஆதாரத்துடன் உள்துறை அமைச்சகத்துக்கும் பிரதமருக்கும் புகாரளிக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.