சு.சாமியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது

 
Published : Jan 21, 2017, 12:53 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
சு.சாமியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது

சுருக்கம்

தொடர்ந்து தமிழர்களை பொறுக்கிகள் என்று வசைபாடி வந்த சுப்ரமணிய சாமியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது

ஜல்லிகட்டுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வரும் இளைஞர்களின் கூட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

போராட்டத்துடைய வீச்சு தாங்காமல் மாநில அரசும் மத்திய அரசும் பணிந்தன.

மாநில அரசால் அவசர சட்டமே இயற்ற முடியாது என்று கூறி வந்த ஓபிஎஸ் வேறு வழியில்ல்மாமல் பிரதமரை சந்தித்து அவசர சட்டம் பிறப்பித்து முறையிட வேண்டியதாகி போனது .

மத்திய அரசும் வேறு வழியில்லாமல் இறங்கி வந்து அவசர சட்டம் இயற்றுவதற்கு ஒத்து கொண்டது.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் குறித்து தொடர்ச்சியாக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சு.சாமி பொறுக்கிகள் என தன ட்விட்டர்  அக்கௌண்டில் பதிவு செய்து வந்தார்.

அவருடைய இந்த கருத்துக்கு பல தரப்புகளில் இருந்து புகார்கள் வந்தது.

பாஜக தலைவர்களாலேயே பொறுத்து கொள்ள  முடியாத அளவுக்கு திரும்ப திரும்ப எழுதி வந்தார் சு.சாமி.

சு.சாமியின் கருத்து உச்சகட்டத்தில் சென்று தமிழ்நாட்டு பொறுக்கிகள் என்மீது ஏன் வழக்கு தொடுக்க பயப்படுகிறீர்கள் என ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.

இதற்கு பல மட்டத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் சு.சாமியின் ட்விட்டர் பக்கம் தற்போது முடக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு