ஜல்லிகட்டுக்கு ஆதரவாக திமுகவினர் உண்ணாவிரதம் - ஸ்டாலின் தலைமையேற்பு…

 
Published : Jan 21, 2017, 12:00 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
ஜல்லிகட்டுக்கு ஆதரவாக திமுகவினர்  உண்ணாவிரதம் - ஸ்டாலின் தலைமையேற்பு…

சுருக்கம்

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்களின் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அனைத்து அரசியல் கட்சியினரும், சமூக நல அமைப்பினரும், பொது மக்களும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி திமுக சார்பில், செயல் தலைவர் மு.க.ஸ்டலின் தலைமையில் நேற்று  ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

மாம்பலம் ரயில் நிலையத்துக்கு வருகை தந்த ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என வலியுறுத்திய வாசகங்கள் அடங்கிய பாதாகயை பிடித்துக் கொண்டு தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் ஏராளமான தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிகிகட்டு நடத்த வலியுறுத்தி திமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு