அரசு ஒத்துகொண்ட அறிக்கை தயார் செய்ய 14 மணி நேரமா ? - ஓடி ஒளியும் ஓபிஎஸ்... இளைஞர்கள் கோபம்

 
Published : Jan 18, 2017, 04:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
அரசு ஒத்துகொண்ட  அறிக்கை தயார் செய்ய 14 மணி நேரமா ? - ஓடி ஒளியும்  ஓபிஎஸ்... இளைஞர்கள் கோபம்

சுருக்கம்

நேற்றிரவு 2 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்த தமிழக அரசு வழக்கம் போல் வாக்குறுதிகளை அள்ளி வீசினர் . ஆனால் ஓபிஎஸ் அறிக்கை வராமல் கலைய மாட்டோம் என்று மெரினாவில் கூடியிருக்கும் போராட்டக்காரர்கள் அறிவித்து 14 மணி நேரம் கடந்த பின்னரும் ஒரு அறிக்கை தயார் செய்ய முடியாமல் முதல்வர் ஓபிஎஸ் ஓடி ஒளிந்ததால் இளைஞர்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.

முதல் நாள் 200 பேர் மட்டுமே மெரினாவில் கூடினர். நேரம் செல்ல செல்ல அது பரவி பெரிதானது. ஆனால் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லவைக்க எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. இதனால் போராட்டம் நேரம் செல்ல செல்ல பெரிதானது. 

இதை யாராவது அமைச்சர்கள் வந்து முடித்து வையுங்கள் என்று சீமான் போன்றோர் கோரிக்கை வைத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை.மாறாக எனக்கென்ன என்று அபிராமி மாலில் ஆயிரத்தில் ஒருவன் படத்தை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பார்த்து களித்தனர்.

இதன் விளைவு நள்ளிரவில் போராட்டம் தொடர்ந்தது. வேறு வழியில்லாமல் டிஜிபி போன்ற உயர் அதிகாரிகள் முதல்வரிடம் எதாவது செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டதன் பேரில் இரண்டு அமைச்சர்களை நள்ளிரவு அனுப்பினார். ஆனால் அவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் முடிவில் முதலமைச்சர் அறிக்கை தரட்டும் நாங்க கலைந்து போகிறோம் என்று உறுதியாக இருந்துவிட்டனர்.

இது நடந்தது நேற்று நள்ளிரவு 2 மணி அதன் பின்னர் 14 மணி நேரம் கடந்த பின்னரும் எதுவும் நடக்கவில்லை. நாலுபக்க அறிக்கை தயாரிக்க 14 மணி நேரமா என நேரம் செல்ல செல்ல இளைஞர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.

முதல்வர் ஓபிஎஸ்சை கண்டித்து கோஷம் எழுப்பி வருகின்றனர். ஓபிஎஸ் உடல் போல் பாடை கட்டி ஊர்வலம் நடத்தி ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். நேரம் செல்ல செல்ல பொறுமையிழக்கும் இளைஞர்கள் சாலைக்கு வந்துள்ளனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒருவேலை தடியடி நடத்த அரசு திட்டமிட்டுள்ளதா? போராட்டம் நடத்தும் இளைஞர்கள் கேட்ட அறிக்கையை தர அரசுக்கு என்ன தேவை.

கிட்டத்தட்ட 30 மணிநேரத்தை கடந்து போராடும் இளைஞர்கள் கடற்கரையிலேயே உள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு